எல்லோருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்
மங்கல அணியும் பொட்டும்
மரகத மணிபோற் கண்ணும்
குங்கும நுதலும் தண்டைக்
குலுங்கிடும் காலும் மஞ்சள்
தங்கிய முகமும் வண்ணத்
தடம்பணைத் தோளும் கொண்ட
மங்கையர் கைபார்த் துண்ண
மலர்கவே பொங்கல் நன்னாள்.
பூச்சிறு மழலை மேனி
புத்துடை நகைகொண் டாட
ஆச்சியர் துணைவர் சேர
ஆனந்தத் தமிழ்ப்பண் பாட
பாற்சுவை வழங்குநன் னாள்
பழந்தமிழ் வளர்த்த பொன் னாள்
போற்சுவை நாளொன் றில்லை
.பொலிகவே இன்பப் பொங்கல்.
7 comments:
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் கோபி கவிதை அருமை
@ நன்றி தேனம்மை. உங்களுக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள்.
@ நன்றி உலவு. தங்களுக்கு எனது இனிய தமிழர் திருநாள் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இனிய தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
பிந்தினாலும் பொங்கல் பொங்கல்தானே !
கோபி...பொங்கல் சாப்பிட்டிருப்பீங்க.நான் சாப்பிடல.
வேலை.அதனால் பொங்கல் வைக்கல.
@ நன்றி திகழ். வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.
@ ஆமா ஹேமா. பொங்கல் இல்லைங்க. எனக்கும் அலுவலகம் இருந்தது. அதனால் எங்கள் வீட்டிலும் பொங்கல் இல்லை. வாழ்த்துக்கு மிக்க நன்றி. உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.
ஆகா அருமை நண்பரே..கவிதை பொங்கலை விட இனிக்கிறது..
ஐயா! வணக்கம்!இ ' மங்கல அணியும் பொட்டும் மரகதமணி மணிபோற் கண்ணும் மஞ்சள் தங்கிய முகமும்" என்பது சிலப்பதிகாரத்தில் உள்ளதா? இல்லை எந்த நூலில் இதன் மூலம் என்பதைக் கூறவும்
Post a Comment