Friday, March 19, 2010

சின்னக் கண்ணம்மா

”சின்னக் கண்ணம்மா” படத்தில் வரும் இந்தப் பாடலை அலுவலகம் விட்டு காரில் வரும் பொழுது கேட்டேன். இவ்வளவு அற்புதமான பாடலைக் கேட்டு எவ்வளவு நாட்களாகி விட்டது. மனதை வருடும் பாடல் இது. வீட்டிற்கு வந்து உடனே யூ-ட்யூபில் இந்தப் பாடலைப் பார்த்தேன். ஆகா.. தலைவர் மேஸ்ட்ரோவின் கொள்ளை கொள்ளும் மெலடி, கார்த்திக்கின் நடிப்பு, பேபி ஷாமிலியின் கொஞ்சல், பாடல் எடுத்தவிதம் அவ்வளவு அருமை.இந்த பாடல் வரிகள் கேட்டால் உங்களுக்கும் இந்த பாடல் பிடிக்கும்.

எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல
பூக்களின் வண்ணம் கொண்டு
பிறந்த மகளே என் மகளே!
நான் வாழ்ந்தது கொஞ்சம்,
அந்த வாசத்தில் வந்துதித்து
உயிரில்கலந்தாய் என் உயிரே!
உன் பூவிழி குறுநகை!
அதில்ஆயிரம் கவிதையே..!

வானம் தாலாட்ட, மேகம் நீராட்ட
வளரும் வெள்ளி நிலவே!
வாழ்வில் நீ காணும் சுகங்கள் நூறாக
வேண்டும் தங்கச் சிலையே!

தாயின் மடிசேரும் கன்று போல
நாளும் வளர்வாய் என் மார்பிலே!


சேய் உன் முகம் பார்க்க துன்பம் தீரும்
காலம் கனியாகும் தேவியே!
சிறுகிளி போல் பேசும் பேச்சில்
எனை மறந்தேன் நானம்மா...!

கனவில் நினைவாக நினைவில் கனவாக
கலந்தால் காதல் தேவி..
உறவின் பலனாக கடலில் அமுதாக
பிறந்தாய் நீயும் கனியே!

காணக் கிடைக்காத பிள்ளை வரமே
கண்ணில் ஜொலிக்கின்ற வைரமே..!
கோடி கொடுத்தாலும் உன்னைப் போல
செல்வம் கிடைக்காது வாழ்விலே

புள்ளி மானே தூங்கும் மயிலே
என்னை மறந்தேன் நானம்மா...
(எந்தன் வாழ்க்கையின்)


படம் : சின்னக் கண்ணம்மா
இசை : இளையராஜா
பாடியவர் : மனோ

காணொளியைக் காண இங்கே சொடுக்கவும்.13 comments:

sathishsangkavi.blogspot.com said...

பாடலும், படமும் நெஞ்சை கொள்ளை கொள்கிறது...

geethappriyan said...

நண்பரே அருமையான பாடல் அது.
யூட்யூபில் சென்று பார்த்து மகிழ்ந்தேன்.
மேலும் இது போல அர்த்தம் உள்ள இனிய பாடல்களை நினைவூட்டுங்கள்

Thenammai Lakshmanan said...

பாட்டு அருமை கோபிநாத் ...

ராகவி ஞாபகமா அல்லது குட்டிப் பிள்ளைக்கா இந்தப் பாட்டு..?

Menaga Sathia said...

இந்த பாடல் எனக்கும் ரொம்ப பிடிக்கும்.உங்களின் இந்த பதிவால் மறுபடியும் கேட்டேன்.நன்றி சகோ!!.

குழந்தை படம் ரொம்ப அழகாயிருக்கு...

ஸ்ரீ.கிருஷ்ணா said...

பாடல் வரிகள் சூப்பர் ....

மைதீன் said...

i love this song.

M.S.R. கோபிநாத் said...

@ வாங்க சங்கவி. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

@ வாங்க கார்த்திக்கேயன். கண்டிப்பாக இது போன்ற பாடல்களை அப்பப்பொழுது நினைவூட்டுகிறேன். நான் கொடுத்திருக்கும் யூட்யூபில் ஆடியோ நன்றாக இருக்காது. வேறு வீடியோ கிடைக்கவில்லை. ஆடியோ மட்டும் கேட்கவேண்டும் என்றால் இந்த லிங்கில் கேட்டுப்பாருங்கள். அருமையாக இருக்கும்.

http://www.youtube.com/watch?v=l_V9a19KsZA

@ நன்றி தேனம்மை. ரெண்டுபேருக்கும் தான்.

@ நன்றி மேனகா. வாழ்த்துக்கு நன்றி.

@ நன்றி ஸ்ரீ கிருஷ்ணா. வருகைக்கும் நன்றி.

@ நன்றி மைதீன். வருகைக்கும் நன்றி.

Thenammai Lakshmanan said...

ungka padangkalaip paarkka thirumba vanthen GOBE.
superb........

தமிழ் உதயம் said...

மனோ கலெக்சனில் இந்த பாட்டை வைத்துள்ளேன். மிக மிக அருமையான பாடல். இதே மாதிரியான மெலோடிகள் நிறைய, மனோ வாய்ஸில் உள்ளது. கேட்டிருப்பீர்கள் தானே.

ஹேமா said...

இனிய அழகான பாடல் தெரிவு கோபி.

நிறைவான இனிய
தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

uma said...

super song.....inimai....

GEETHA ACHAL said...

அனைவருக்கும் கண்டிப்பாக இந்த பாடல் பிடிக்கும்..எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று...நன்றி

அண்ணாமலை..!! said...

படத்தில் வந்த பாடலில் அழகாகப் படங்களை செருகி இருக்கிறீர்கள்!
வரிகள் மிக அழகானவை அல்லவா..!!!