
நண்பர்களுக்கு வணக்கம். சில பல வேலைப் பளுக் காரணமாக சில மாதங்களாக பதிவுகள் இடமுடியவில்லை. முதலில் வாரத்திற்கு மூன்று பதிவு என்று ஆரம்பித்து, இரண்டாகி, கடைசியில் வாரத்திற்கு ஒன்று என்று போய்க்கொண்டிருந்தது. சொல்லி வைத்தாற்ப் போல் தொடர்ந்து வேலை. நண்பர்கள் பதிவுக்குச் சென்று படிப்பது, பின்னூட்டம் இடுவது கூட குறைந்து விட்டது.மேலோட்டமாகப் பார்ப்பதோடு சரி. இனிமேல் இவன் எங்க எழுதப் போகிறான் என்று ஃபாலோயர் லிஸ்டிலிந்து இரண்டு மூன்று பேர் கழண்டு கொண்டார்கள்.
உண்மையான காரணங்கள் இரண்டு தான். ஒன்று- நான் நீண்ட வருடங்களாக வாங்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த DSLR(Nikon D90) கேமிரா மூன்று மாதங்களுக்கு முன்னால் வாங்கினேன். அதை அக்குவேறாக, ஆனிவேறாக பிரித்து படித்துக் கொண்டிருந்தேன். இன்னும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்துக் கொண்டு தான் இருக்கிறேன். டிஜிட்டல் காமிராவைப் பற்றியும், நுனுக்கங்களைப் பற்றியும் தமிழில் இந்த வலைப் பதிவில்(http://photography-in-tamil.blogspot.com/)தெரிந்து கொண்டது தான் அதிகம். பழைய பதிவுகளில்(2007-June)இருந்து ஆரம்பித்து இன்று வரை ஒவ்வொரு பதிவும் அற்புதம். யு-டியூபிலும் ஆயிரக் கணக்கில் டிப்ஸ் உள்ளது. இனிமேல் தான் படங்கள் எடுத்து பழக வேண்டும். உங்களுக்குத் தெரிந்த வலைத் தளங்கள் ஏதும் இருந்தால் எனக்கு தெரிவிக்கவும்.
இரண்டாவது காரணம். ஒரே மாதிரியான பதிவுகளை கொடுக்கிறோமோ என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டேன். சினிமாவைப் பற்றி வரும் பதிவிற்குத் தான் நிறைய ஹிட்ஸ் கிடைக்கிறது.அதே மாதிரியான பதிவைத் தான் எழுத தூண்டுகிறது.சினிமாவைப் பற்றி எழுத ஏகப்பட்டபேர் இருப்பதால் ஏதாவது புதுசாக எழுதலாம் என்று நினைத்தேன். ஆங்கிலத்தில் வந்து பிரபல்யமான ஒரு புத்தகத்தை தமிழில் மொழிப் பெயர்த்து தொடராக எழுதலாம் என்று நினைத்தேன். இதனால் ஏதும் சட்டசிக்கல்கள்(Copyrights) வருமா என்று யோசித்து சிலரிடம் யோசனை கேட்டேன். அவர்கள் கொடுத்த தைரியத்தில் எழுதலாம் என்று முடிவெடுத்து விட்டேன்.

பொதுவிஷயங்களைப் பற்றியும்,சினிமாவைப் பற்றியும் எழுதுவேன். தொடர்தான் பிரதானமாக இருக்கும். என்ன எழுதப் போகிறேன் என்று கேட்பது தெரிகிறது..அது ”ரகசியம்”. இது ஒரு தன்னம்பிக்கைத் தொடர்.மொழிமாற்றம் செய்வதில் ஒரு சிக்கல் இருக்கிறது. தனது சொந்தக் கருத்தையும், எழுதுபவர்கள் திணிப்பது. நான் எழுதுவதில் அப்படி இருக்காது. முடிந்தவரை எளிய தமிழில் எழுத முயற்சி பண்ணுகிறேன்.
தொடரில் சந்திப்போம் நண்பர்களே !
10 comments:
உங்கள் தொடரை எதிர்பார்கிறேன்
///////பொதுவிஷயங்களைப் பற்றியும்,சினிமாவைப் பற்றியும் எழுதுவேன். தொடர்தான் பிரதானமாக இருக்கும். என்ன எழுதப் போகிறேன் என்று கேட்பது தெரிகிறது..அது ”ரகசியம்”. இது ஒரு தன்னம்பிக்கைத் தொடர்.மொழிமாற்றம் செய்வதில் ஒரு சிக்கல் இருக்கிறது. தனது சொந்தக் கருத்தையும், எழுதுபவர்கள் திணிப்பது. நான் எழுதுவதில் அப்படி இருக்காது. முடிந்தவரை எளிய தமிழில் எழுத முயற்சி பண்ணுகிறேன்./////
உங்களது நடையில் உங்களின் பதிவை எதிர்பார்க்கிறேன் .
ஆவலுடன் உங்கள் தொடரை எதிர்பார்க்கிறேன்....வாழ்த்துக்கள்!!
எதிர்பார்க்கிறேன், கோபிநாத்..
தொடருங்கள், தொடர்கிறோம்.
நண்பரே ,
புதிய slrக்கு வாழ்த்துக்கள்,கலக்குங்க,போட்டொக்ராப்பி அரிய கலை,http://vijayarmstrongcinematographer.blogspot.com
ஃபாலோயராகி படித்து பயன் பெறுங்கள்
@ நன்றி செந்தில். வருகைக்கு நன்றி.
@ நன்றி சங்கர்.
@ நன்றி மேனகா.
@ நன்றி மாணிக்கம்.
@ நன்றி கார்த்திக்கேயன். நான் ஏற்கனவே பாலோயராகி விட்டேன்.
I used to read your blogs regularly. It is good to see your blogs after a long break. Pls keep blogging.
நன்றி சதீஷ். வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
http://encounter-ekambaram-ips.blogspot.com/2010/06/blog-post_13.html
இந்த இடுகைக்கு உங்க பின்னூட்டத்தை வரவேற்கிறேன். நன்றி
Post a Comment