
Saturday, September 26, 2009
நவராத்திரி

Thursday, September 24, 2009
வெயிலோடு உறவாடி....

நாம் எத்தனையோ பாடல்களை அனுதினமும் கேட்கிறோம். சில பாடல்கள் நம் நெஞ்சை வருடுவதோடு மட்டுமில்லாமல் நம்மை நம்முடைய பழைய நினைவுகளுக்குள் கொண்டு செல்லும். அப்படி நான் ரசித்த பாடல் "வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி" என்று வெயில் படத்தில் வந்த பாடல். இதை எழுதியவர் நா.முத்துக்குமார். இயக்கம் வசந்த பாலன். இசை G.V.பிரகாஷ்.

வேப்பங்கொட்டை அடிச்சு வந்த ரத்தம் ரசிச்சோம், வத்திக்குச்சி அடுக்கி கணக்கு பாடம் படிச்சோம், தண்ணியில்லா ஆத்தில் கிட்டிப்புல்லு அடிச்சோம், தண்டவாளம் மேல காசை வச்சு தொலச்சோம்.
இன்றும் எனக்கு நினைவிருக்கிறது, வெப்பங்கொட்டையை ரெண்டாக உடைத்து அதில் ஒரு பாதியை கையின் முட்டியை மடக்கி அதன் மேல் நடுவில் வைக்க நண்பன் அதை ஓங்கி அடிக்க கையை பத்து முறை சுற்றவேண்டும். அப்படி சுற்றினால் பலம் வரும் என்பது குருட்டு நம்பிக்கை. இதை பள்ளி கூடத்தில் பல முறை செய்தது நினைவிருக்கிறது.
அஞ்சு பைசா ஃபிலிமை வாங்கி அப்பாவோட வேட்டியிலே,கண்ணாடி லென்சை வச்சு சினிமா காமிச்சோம்,அண்ணாச்சி கடையில தான் எண்ணெயில தீக்குளிச்ச,பரோட்டாக்கு பாதி சொத்தை நாம அழிச்சோம்
மேலுள்ள வரிகளில் சொல்லியது போல பரோட்டாவுக்கு சொத்தை அழித்ததை விட நெகடிவ்ற்கும்,லென்சுகும் சொத்தை அழித்தது தான் ஜாஸ்தி.
பொட்டல் காட்டில் பொழுதெல்லாம்,ஓட்டம் போட்டு திரிஞ்சோம்,வெயிலத் தவிர வாழ்க்கையில,வேற என்ன அறிஞ்சோம்

தொப்புள்கொடியைப் போலத்தான் இந்த ஊரை உணர்ந்தோம்.
வெயிலைத் தவிர வாழ்க்கையில வேற என்ன அறிஞ்சோம்
இந்த வரிகள் எல்லாம் பழைய நினைவுகளை சிறிது ஞாபகபடுத்திப் போகும்.இன்றும் இளையராஜாவின் பாட்டுக்கள் நம் மனதில் நீங்கா இடம்பெற்றிருக்க காரணம் அந்த பாடல்களோடு நாம் வளர்ந்ததால். பழைய பாடல்கள் கேட்கும் போது நம் நினைவுகளை சிறிது பின்னோக்கி பார்ப்போம். அந்த காலம் நமக்கு மறுபடியும் வாராதா என்ற ஏக்கமும் வந்து போகும்.
மீண்டும் ஒரு நல்ல பாடலுடன் சந்திக்கிறேன். உங்களுக்காக அந்த பாடலின் திரை வடிவத்தை High Definition இல் இங்கே ...
Sunday, September 20, 2009
தி லாஸ்ட் சமுராய்

நீங்கள் எப்பொழுதாவது நீங்கள் எதிரியாய் நினைக்கும் ஒருவரிடம் இருந்து நல்ல குணங்களை கற்றதுண்டா? நாம் எப்பொழுதும் ஏதிரியை எப்படி வெல்லலாம் என்று தான் எண்ணிக் கொண்டிருப்போமே தவிர எதிரியை அவன் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்துக் கொள்ள நினைக்க மாட்டோம்.


படத்தில் சில சுவாரஸ்யங்கள்
- சமுராயுடன் முதல் போரில் தன்னால் கொல்லப்பட்ட டாக்காவின் வீட்டில் தங்கும்போது நேதன் குற்ற உணர்வால் கூனி குறுகுவது சிறந்த நடிப்பு.
- எந்த ஒரு பயிற்சியும் ஆரம்பத்தில் கற்பதற்கு மிக கஷ்டம் என்பதை சமுராய் பயிற்சியில் நேதன் உணர்வது.
- சமுராய் பயிற்சியை கற்பதற்கு முதலில் அவர்கள் பேசும் மொழியை கற்று அவர்களை போலவே ஜப்பான் மொழி குறுகிய காலத்தில் பேசுவது நாம் எல்லோரும் கற்று கொள்ள வேண்டிய பாடம்.
- டாக்காவின் மகன் முதலில் நேதனை வெறுப்பதும் பின்னர் பாசத்தால் அவனிடம் நெருங்குவதும் நல்ல காட்சிகள்.
- இதில் ஒரு மெல்லிய காதலும் உண்டு.
- சிறை பிடிக்கப்பட்ட எதிரிகளை தங்கள் கைகளால் கொல்லாமல் அவர்களின் வாளை வைத்து அவர்களே கொள்ள சொல்வது ஒரு படையின் நாகரிகம் தெரிகிறது.
- கடைசி காட்சியில் அந்த அரசர் நேதனிடம் சமுராய்(கட்சு மோடோ) எப்படி போரில் இறந்தான் என்பதை எனக்கு சொல்வாயா என்று கேட்பார் அதற்கு நேதன் அவர் எப்படி இதுவரை வாழ்ந்தார் என்பதை சொல்கிறேன் என்று சொல்வார்.
Emperor Meiji: Tell me how he died.
Algren: I will tell you how he lived.
Katsumoto: Many of our customs seem strange to you. And the same is true of yours. For example, not to introduce yourself is considered extremely rude, even among enemies.
Katsumoto: To know my enemy.
Algren: I've seen what you do to your enemies.
Katsumoto: The warriors in your country do not kill?
Algren: They don't cut the heads off defeated, kneeling men.
Katsumoto: General Hasegawa asked me to help him end his life. A samurai cannot stand the shame of defeat. I was honored to cut off his head.
படத்தின் முன்னோட்டம்
Friday, September 18, 2009
சைபர்கிரிமினல்கள்-டாப்-8 !!

உலக அளவில் சைபர்கிரைம் என்பது பல நிறுவனங்களின் பொருளாதாரத்தைக் கூட பாதிக்கும் என்பது அதிர்ச்சியான ஒன்று என்றாலும் இப்படிப்பட்ட செயல்களை நாம் ஆங்கிலப் படங்களிலும் செய்திகளிலும் காண்கிறோம். இதனைப் பற்றி அறிவது மிகவும் அவசியமாகத்தெரிகிறது.
மிகவும் பயங்கரமான சைபர் கிரைம்கள்பற்றிப் பார்ப்போம்.
1.கோடியாக்-KODIAK- கோடியாக் மிகவும் புத்திசாலித்தனமாக மிகப் பெரும் பணக்காரர்களின் வங்கிக்கணக்குகளில் இருந்து பணத்தை எடுத்து பல நாடுகளிலும் போலி கம்பெனிகளின் பெயரில் மாற்றிவிட்டான். அவன் மாற்றிய தொகை $10.7 மில்லியன். அப்புறம் என்ன? மூன்று வருட ஜெயில் தண்டணை அனுபவித்தான்!
2.டான் ஃபனுச்சி-DON FANUCCI-இவன் தன் சைபர்கிரைம் வேலைகளை ஆரம்பிக்கும்போது வயது 15 தான். பிப்ரவரி 2000 ல் மிகவும் பிரபலமான வணிக இணைய தளங்களின் மீது தன் கைவரிசையைக் காட்டினான். இதனால் பல நிறுவனங்களுக்குக் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டது. செப்டம்பர் 2001 ல் வீட்டுக்காவலில் எட்டுமாதம் வைத்தனர்.பெருந்தொகை அபராதமும் விதிக்கப்ப்பட்டது. இவனுக்கு இண்டெர்நெட் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. உலகம் முழுக்க $7.5 மில்லியனிலிருந்து $1.2 பில்லியன் இழப்பு இவனால் ஏற்பட்டது.
3.POX-பாக்ஸ்- Love Bug-I love you- என்ற பிரபலமான ஈமெயில் வைரஸை உருவாக்கியவர்களில் ஒருவன். இவனுடைய இந்த வைரஸ் பெண்டகன் ,C I A கம்ப்யூட்டர்களையே தாக்கியது என்றால் பாருங்கள்! மே 4 2000 ல் 50 மில்லியன் கம்ப்யூட்டர்கள் இவனால் செயலிழந்தன. பாக்ஸ் பிலிப்பைன்ஸில் இருப்பதால், அந்தநாட்டில் கம்ப்யூட்டர் ஹேக்கிங்க் சட்டங்கள் எதுவும் இல்லாததால் எந்த தண்டணையும் இல்லாமல் சுகமாக வாழ்கிறான்!
4.MISHKAL-மிஷ்கல் Eastern European carding rings என்ற அமைப்பில் ஒருவன் என கருதப்படுகிறது. போலி கிரெடிட் கார்ட், டெபிட் கார்டுகள் கோடிக்கணக்கில் தயாரிப்பதுதான் தொழில். தொழிலின் உச்சத்தில் இருக்கும்போது இவனுடைய ஒருநாள் வருமானம் எவ்வளவு தெரியுமா? $100,000!!!! கடைசியில் கைது செய்யப்பட்டு வெறும் ஆறு மாதம் மட்டும் ஜெயிலில் கழித்தான். உடனடியாக நம் ஊரைப்போல் உக்ரைன் அரசில் பிரதிநிதியாகிவிட்டான்.
5.THE WIZ AND PIOTREK- இருவரும் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள்! 50000 கிரெடிட் கார்டுகளின் தகவல்களைத் திருடி கோடிக்கணக்கில் சம்பாதித்தனர் இருவரும். இருவருக்கும் மூன்று வருட சிறைத்தண்டணையும், அபராதமும் விதிக்கப்பட்டது.
6.Roper, Red_Skwyre, and Dragov-ரோபர்,ரெட்ஸ்கையர்,ட்ராகோவ்- இவர்களும் சைபர்கிரைம் கில்லாடிகள். இவகளால் 40 மில்லியன் பவுண்டுகள் நஷ்டம் ஏற்பட்டது. 2007 அக்டோபரில் பிடிபட்ட இவர்களுக்கு எட்டு ஆண்டு சிறைத்தண்டணை விதிக்கப்பட்டது!
7.BANDIT-பண்டிட் - இவன் 500000 கம்ப்யூட்டர்களை ஹாக் செய்து அவற்றைத் தன் தவறான செயல்களுக்குப் பயன்படுத்தி பணம் பார்த்துவந்தான்.2005 நவம்பரில் கைது செய்யப்பட்ட இவனுக்கு ஐந்துவருட ஜெயில் தண்டணை வழங்கப்பட்டது. மிலிட்டரி கம்ப்யூட்டர்களில் இவன் கைவரிசையைக் காட்டியதால் அமெரிக்க அரசாங்கத்துக்கு $15000 பணம் செலுத்தினானாம்!!
என்ன இந்தியாவில் எதுவும் நடக்கவில்லையா? என்கிறீர்களா? இருக்கு! அதற்காக ஒரு கொசுறு:
8.Li Chen Sien , Wynne Peter- இந்தியாவில் இந்த இருவரும் 56540 பவுண்டுகளை இன்சூரன்ஸ் நிறுவனத்திலிருந்து நெட் வழியாக சுட்டதால் 2009 பிப்ரவரியில் நோய்டாவில் கைது செய்யப்பட்டனர்.
கிரெடிட் கார்டுகளிலும், இண்டெர்நெட் வங்கிகளிலும் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. பெருகிவரும் இந்த வசதிகளால் சைபர்கிரைம்களும் அதிகரிக்கத்தான் செய்யும்!! அவற்றிலிருந்து நாம் நம்மைக் காப்பாற்றிக் கொள்ளும் வழிகளை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்!!
Wednesday, September 9, 2009
நான் நானாகவே!
என்னை பற்றிய சுய விமர்சனம்.
1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?எனக்கு முதலில் வைத்த பெயர் சொக்க நாதன் (என்னுடைய தாத்தா பெயர்). பிறகு என் பெற்றோர்கள் என்ன நினைத்தார்களோ என்னுடைய பெயரை கோபிநாத் என்று மாற்றி விட்டார்கள். நான் 2003 ஆண்டு numerology படி என்னுடைய பெயரை கொஞ்சம் திருத்திக் கொண்டேன். என்னுடைய பெயர் எனக்கு ரெம்ப பிடிக்கும்.
2. கடைசியாக அழுதது எப்பொழுது?
Taare Zameen Par என்ற ஹிந்தி படம் climax என்னை மிகவும் பாதித்து கண் கலங்கிவிட்டேன் .
3. உங்களோட எழுத்துக்கள் உங்களுக்கு பிடிக்குமா?கண்டிப்பாக. என்னுடைய தமிழ் எழுத்துக்கள் நன்றாக இருப்பதாக எல்லோரும் சொல்வார்கள்.
4. பிடித்த மதிய உணவு என்ன?
செட்டிநாடு சிக்கன் குழம்புடன் சாதம்.
5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
ரெம்ப யோசித்து தான் ஒருவருடன் பழக ஆரம்பிப்பேன் . நானாக வலிய சென்று பேசியது ரெம்ப குறைவு.6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
என்னுடைய ஊர் குற்றாலம் பக்கத்தில் இருப்பதாலோ என்னவோ எனக்கு அருவியில் குளிக்க தான் பிடிக்கும். நான் சென்னையில் 10 வருடங்களுக்கு மேல் வசித்திருக்கிறேன். ஒரு தடவை கூட கடலில் குளித்து கிடையாது.
7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
முதலில் தோற்றம்(Appearance). அவருடைய Attitude மற்றும் Behaviors.
8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?பிடித்த விஷயம் பொறுமை. பிடிக்காத விஷயம் சோம்பல் .
9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடித்த விஷயம் : எல்லாத்துலயும் கரெக்டா இருக்கிறது.பிடிக்காத விஷயம் : காரணம் இல்லாமல் வரும் முன்கோபம்.
10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
என்னுடைய தாய் மாமா செல்வராஜ் அவர்கள்.11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
சாம்பல் நிற T.Shirt மற்றும் Blue Jeans Pant.
12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?
இளையராஜாவின் இசை வெள்ளம் என்னுடைய iPod லிருந்து .13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
எனக்கு பிடித்த நீலக் கலர்.
14. பிடித்த மணம்?
வாசனை பூக்களின் மணம்.15. பிடித்த விளையாட்டு?
கிரிக்கெட் , Carom, Tennis, கோலி, பம்பரம் , கில்லி.
16. கண்ணாடி அணிபவரா?
ஆம்.
16. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?
நான் திரைப்படங்களின் மிக பெரிய ரசிகன். நாவல்களை படமாக்குவது மிக பெரிய திறமை வேண்டும். அந்த மாதிரி திரை படங்கள் ரெம்ப பிடிக்கும். என்னை பொறுத்தவரை திரை படங்கள் மிக இயற்கையாக இருக்கவேண்டும். இது பற்றி பின்னர் விரிவாக எழுதுகிறேன்.17. கடைசியாகப் பார்த்த படம்?
தமிழில் "பொக்கிஷம்" ,ஆங்கிலத்தில் Angels & Demons, ஹிந்தியில் Rab Ne Bana Di Jodi.
18. பிடித்த பருவ காலம் எது?
இலையுதிர் காலமும் (Falls), குளிர் காலமும் (Winter)
19. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
தமிழ் புத்தகம் படித்து வெகு நாட்கள் ஆக்கிவிட்டது. வாராவாரம் ஆனந்த விகடன் , ஜூனியர் விகடன் படிப்பேன்.
20. உங்கள் டெஸ்க்டாப்ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
Desktop படங்கள் எல்லாம் நான் எடுத்த புகைபடங்களாக இருப்பதால் அடுத்த நல்ல படம் கிடைக்கும் வரை வைத்திருப்பேன்.
21. பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
பிடித்த சத்தம் குழந்தையின் சிரிபொலி . பிடிக்காத சத்தம் குழந்தையின் அழுகை.
22. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
முதன் முதலில் சிங்கப்பூர். இப்பொழுது அமெரிக்கா
23. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
இன்னும் கண்டு பிடிக்க முயற்சிக்க வில்லை.
24. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
காங்கிரஸ் கட்சி ஈழ தமிழர்களை இப்போது வரைக்கும் கண்டு கொள்ளாமல் இருப்பது.
25. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
சோம்பல் என்ற சாத்தான்.
26. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
இந்தியாவில் குற்றாலம். வெளிநாட்டில் சுவிற்சர்லாந்து.
27. எப்படி இருக்கணும்னு ஆசை?
உயர்ந்த லட்சியங்களுடன்
28. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
வாழு , வாழ விடு
29. மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
நண்பர்களுடன் அரட்டை அடிக்க ரெம்ப பிடிக்கும்.