Saturday, September 26, 2009

நவராத்திரி


அம்பாளுக்குரிய பண்டிகைகள் எவ்வளவோ இருந்தாலும் ,அவற்றுள் முக்கியமானது ஒன்பது நாட்கள் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாதான். முக்கியமாக பார்க்கபோனால் ஒரு வருஷத்தில் நான்கு நவராத்திரிகள் புரட்டாசி மாதம் அமாவாசை அடுத்த நாள் வரும் நவராத்திரியை எல்லோரும் கொண்டடுவார்கள் .



இந்த ஒன்பது நாட்களுடன் ஒரு நாளைச் கூடுதலாகச் சேர்த்துதசராகக் கொண்டாடப்படுகிறது. தசம் என்றால் பத்து அத்துடன் ஒரு இரவைச்சேர்த்து (தச+ரா) பத்துநாள் திருவிழாவாக கொண்டாடுகிறார்கள். இந்த பண்டிகைமைசூரிலுள்ள சாமுண்டேஸ்வரி அம்பிகைக்கு சிறப்பாக விழா கொண்டாடப்படுகிறது.



வீட்டில் பத்து நாட்கள் கொண்டாடப்படும் விழாவாக நவராத்திரி,தவிர வேறு விரத விழா இல்லை. வீட்டில் கொண்டாடப்படும் இந்த விழா வீடுஎன்ற கோயிலுக்கு ஒரு’பிரம்மோற்சவம்’ என்று கூட சொல்லாம்.



புரட்டாசி மாத வளர்பிறைப் பிரதமையில் தொடங்கி விஜயதசமியில்நவராத்திரி முடிகிறது. முதல் ஒன்பது நாட்களில் முப்பெரும் தேவியரைவழிபடவேண்டும்.முதல் மூன்று நாட்கள் துர்க்கையின் வழிபாடு.இடை மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடு.இடை மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு.



துர்க்கை : இவள் நெருப்பின் அழகு. ஆவேசப் பார்வை. வீரத்தின் தெய்வம். சிவபிரியை.இச்சா சக்தி. ”கொற்றவை ” , ”காளி” என்றும் குறிப்பிடுவர். வீரர்களின்தொடக்கத்திலும், முடிவிலும் வழிப்படும் தெய்வம். துர்க்கை, மகிஷன் என்றஅசுரனுடன் ஒன்பது இரவுகள் போரிட்டாள். இவையே ‘ நவராத்திரி ‘ எனப்படும்.



இலட்சுமி : இவள் மலரின் அழகு. அருள் பார்வையுடன் அழகாக விளங்குகிறாள்.செல்வத்தின் தெய்வம். விஷ்ணு பிரியை. கிரியா சக்தி.இலட்சுமி அமுதத்துடன் தோன்றியவள். அமுத மயமானவள்.பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் வீற்றிருக்கிறாள்.



சரஸ்வதி : இவள் வைரத்தின் அழகு. அமைதிப் பார்வையுடன் அழகாகப் பிரகாசிக்கிறாள்.கல்வியின் தெய்வம். பிரம்பிரியை. ஞான சக்தி.தமிழ் நூல்கள் சரஸ்வதியை, ‘ற்றங்கரைச் சொற்கிழத்தி ‘என்று குறிப்பிடுகிறது.இவளுக்குத் தனி கோயில் இருக்குமிடம் ஊர் கூத்தனூர்.



சரஸ்வதி பூஜை : நவராத்திரியின் ஆறாவது, ஏழாவது நாளில் மூல நட்சத்திரம்உச்சமாக இருக்கும்போது, சரஸ்வதியை வாகனம் செய்வதுமுறையாகும். இது தேவியின் அவதார நாள்.சரஸ்வதி பூஜை சிரவணம் என்ற நட்சத்திரம் உச்சமாகும் நாளில் நிறைவுபெறுகிறது. சிரவணம் – திருவோணம் அன்றே விஜயதசமி.




No comments: