Sunday, September 20, 2009

தி லாஸ்ட் சமுராய்

இது என்னுடைய முதல் விமர்சனம். இந்த படம் நான் ரசித்து அனுபவித்து பார்த்த படம் . உங்களுக்கும் பிடிக்கும். 2003 ஆம் ஆண்டு வெளிவந்தது.


நீங்கள் எப்பொழுதாவது நீங்கள் எதிரியாய் நினைக்கும் ஒருவரிடம் இருந்து நல்ல குணங்களை கற்றதுண்டா? நாம் எப்பொழுதும் ஏதிரியை எப்படி வெல்லலாம் என்று தான் எண்ணிக் கொண்டிருப்போமே தவிர எதிரியை அவன் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்துக் கொள்ள நினைக்க மாட்டோம்.


அமெரிக்கர்கள் எப்பொழுதும் தங்கள் பலத்தை பெருமையாய் சொல்லி கொண்டிருபார்களே தவிர எதிரி வளர்வதை அவர்களால் தடுக்க முடியாது. அதற்கு உதாரணம் Pearl Harbor Attack. இன்னும் பல.. ஜப்பானியர்கள் தங்கள் எதிரிகள் அமெரிக்கர்களே ஆனாலும் அவர்களிடம் வித்தைகளைக் கற்று கொண்டு அவர்களைவிட உலகத்தில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்துவதில் கைத் தேர்ந்தவர்கள். உதாரணம் இன்று அமெரிக்கர்கள் வாங்கும் ஜப்பான் கார்கள் ஹோண்டா மற்றும் டொயோடா.
நேதன் அல்க்றேன் (Tom Cruise) மிக சிறந்த அமெரிக்க ராணுவ வீரன் மற்றும் போர் படைத் தளபதி. படைகளை தயார்ப் படுத்துவதிலும் , போர் முனையில் எந்த எந்த இடத்தில் அவர்களை நிற்க வைப்பது மற்றும் ஏதிரியை எந்த முனையில் இருந்து தாக்குவது என்பதை கற்று தேர்ந்தவன். அவனுக்கு ஜப்பானில் இருந்து ஒரு படையை வழி நடத்திச் செல்ல அழைப்பு வருகிறது. ஜப்பானில் அப்பொழுது துப்பாக்கி மற்றும் பீரங்கி போன்ற ஆயுதங்களை கொண்டு உள் நாட்டில் நிலவும் Civil War கட்டு படுத்தவும் அங்குள்ள வீரர்களை தயார்ப் படுத்தவும் அழைக்க படுகிறார். ஆறு மாதத்தில் இந்த வேலையை முடிக்க முன்று வருட சம்பளம் அவருக்கு பேச படுகிறது. ஜப்பானில் உள்நாட்டில் அரசருக்கு எதிராக போராடும் போராட்டக் காரர்களை வழி நடத்திச் செல்பவர் கட்சுமொடோ (Ben Watanabe). இவருக்கு அரசர் ஜப்பானை பாரம்பரியத்தை விட்டு மேற்கத்திய முறையில் போவது ஜப்பானை வேறு நாட்டிற்கு அடகு வைப்பதர்ர்கு சமம் என்று போராடுபவர்.


நேதன் அல்க்றேன் ஜப்பான் வந்து படைகளைப் பார்கிறான். போர் பயிற்சி இல்லாமல் துப்பாக்கி தூக்கக்கூடத் தெரியாமல் நிற்கும் படையை பார்த்து ஒமுரா(Masato Harada) விடம் இவர்கள் போருக்குத் தயார் இல்லை என்று கூறுகிறான். ஆனால் ஒமுரவோ போருக்குச் சென்றே ஆகவேண்டும் என்று கட்டளை இடுகிறான். போர் நடக்கிறது. போரில் ராணுவ வீரர்களைக் கொன்று நேதனை சிறை பிடித்து சென்று விடுகிறார்கள்.

கட்சுமொடோ, நேதன் அவனால் கொல்லப்பட்ட டாகா வீட்டில் தங்க வைக்கிறான். கட்சுமொடோ நேதனிடம் மிக தெளிவான ஆங்கிலத்தில் பேசுகிறான். அமெரிக்க படை உத்திகளை பற்றி நேதனிடம் கேட்டு அறிந்து கொள்கிறான்.


நேதன் குணமானதும் கட்சு மோடோவின் போர் பயிற்சியை நேரில்ப் பார்கிறான். ஜப்பானியர்களின் வாழ்கை முறையும் , பாரம்பரியத்தையும், போர்ப் பயிற்சி செய்யும் முறையும் கண்டு வியக்கிறான். அவனும் அந்த போர் பயிற்ச்சியை கற்று கொள்ள விரும்புகிறான். சில தோல்விகளுக்கு பிறகு கற்று கொள்கிறான். ஜப்பான் மொழியையும் கற்று கொள்கிறான். கட்சுமொடோ நேதனிடம் போர்பயிற்சி மற்றும் போரைத் தலைமை தாங்கி செல்லும் திறமையை தெரிந்துக் கொள்கிறான். நேதன் கட்சுமொடோவை ஒரு ஆபத்தில் இருந்து அவனையும் அந்த கிராமத்தையும் காப்பாற்றுகிறான். இருவரும் பிறகு நண்பர்களாகிறார்கள்.


இருவரும் சேர்ந்து ராணுவத்தை பழி வாங்கினார்களா ? கட்சுமொடோ நேதனை எவ்வாறு பயன்படுத்தி கொண்டான் மற்றும் அரசர் தன்னைச் சுற்றி உள்ள போலியாயனவர்களை எப்படி அடையாளம் கண்டுக் கொண்டார் என்பதை நல்ல DVD இல் பார்க்கவும்.

படத்தில் சில சுவாரஸ்யங்கள்

  • சமுராயுடன் முதல் போரில் தன்னால் கொல்லப்பட்ட டாக்காவின் வீட்டில் தங்கும்போது நேதன் குற்ற உணர்வால் கூனி குறுகுவது சிறந்த நடிப்பு.
  • எந்த ஒரு பயிற்சியும் ஆரம்பத்தில் கற்பதற்கு மிக கஷ்டம் என்பதை சமுராய் பயிற்சியில் நேதன் உணர்வது.
  • சமுராய் பயிற்சியை கற்பதற்கு முதலில் அவர்கள் பேசும் மொழியை கற்று அவர்களை போலவே ஜப்பான் மொழி குறுகிய காலத்தில் பேசுவது நாம் எல்லோரும் கற்று கொள்ள வேண்டிய பாடம்.
  • டாக்காவின் மகன் முதலில் நேதனை வெறுப்பதும் பின்னர் பாசத்தால் அவனிடம் நெருங்குவதும் நல்ல காட்சிகள்.
  • இதில் ஒரு மெல்லிய காதலும் உண்டு.
  • சிறை பிடிக்கப்பட்ட எதிரிகளை தங்கள் கைகளால் கொல்லாமல் அவர்களின் வாளை வைத்து அவர்களே கொள்ள சொல்வது ஒரு படையின் நாகரிகம் தெரிகிறது.
  • கடைசி காட்சியில் அந்த அரசர் நேதனிடம் சமுராய்(கட்சு மோடோ) எப்படி போரில் இறந்தான் என்பதை எனக்கு சொல்வாயா என்று கேட்பார் அதற்கு நேதன் அவர் எப்படி இதுவரை வாழ்ந்தார் என்பதை சொல்கிறேன் என்று சொல்வார்.
சில வசனங்கள் உங்களுக்காக இங்கே

Algren: This is Katsumoto's sword. He would have wanted you to have it. He hoped with his dying breath that you would remember his ancestors who held this sword, and what they died for. May the strength of the Samurai be with you always.

Emperor Meiji: Tell me how he died.
Algren: I will tell you how he lived.


Katsumoto: Many of our customs seem strange to you. And the same is true of yours. For example, not to introduce yourself is considered extremely rude, even among enemies.

Algren: What do you want?
Katsumoto: To know my enemy.
Algren: I've seen what you do to your enemies.
Katsumoto: The warriors in your country do not kill?
Algren: They don't cut the heads off defeated, kneeling men.
Katsumoto: General Hasegawa asked me to help him end his life. A samurai cannot stand the shame of defeat. I was honored to cut off his head.

படத்தின் முன்னோட்டம்






இந்த படம் ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்க வேண்டிய படம். என்னுடைய தமிழுக்கு மன்னிக்கவும். தமிழில் எழுதி பல நாட்கள் ஆகி விட்டது. நல்ல தமிழில் எழுத முயற்சி பண்ணுகிறேன். மீண்டும் ஒரு நல்ல படத்துடன் அடுத்த விமர்சனத்தில் சந்திக்கிறேன். இந்த படம் பார்க்க நேரிட்டால் பார்த்தும் எனக்கு பின்னூட்டம் இடுங்கள். நன்றி.

2 comments:

அரங்கப்பெருமாள் said...

நல்ல படம்தான். நானும் கூடப் பார்த்தேன்.விமர்சனம் கூட நன்றாக இருக்கு.

வசனமெல்லாம் போட்டு வித்தியாசமான எழுத்து.

Ashok Muthiah said...

naan padam paakalai..aana minute visayamellam observe panni, reviewla highlight panni irukkenga though its ur first film review posted..very good..