Thursday, November 19, 2009

ஓட்டவாய் மாரிமுத்து பக்கங்கள்- 21/11/2009

இதுவரை எழுதிய பதிவுகளில் என் சினிமா விமர்சனதிற்குத் தான் அதிக ஓட்டுகள் கிடைத்துள்ளது. சரி விமர்சனம் மட்டும் இல்லாமல் நிறைய பொதுவான விஷயங்களைப் பற்றியும் எழுதலாம் என்று இந்த தலைப்பை எடுத்துள்ளேன். மாரிமுத்து என்ற பெயரில் யாராவது இதைப் பார்த்தால் மன்னிக்கவும். சும்மா, கேட்சியாக(Catchy) இருக்கட்டும் என்று இந்த பெயரை வைத்தேன். வேறு எந்த உள்குத்தும் கிடையாது. வாரத்திற்கு குறைந்தது மூன்று ஆங்கிலப் படம் பார்க்கும் பழக்கம் இன்னும் இருந்து கொண்டிருக்கிறது.அந்த பழக்கத்தை இன்னும் விட முடியவில்லை.விட முயற்சிக்கவில்லை என்பது தான் உண்மை.எந்த ஒரு மொழிப் படமானாலும் பார்ப்பேன்.எத்தனையோ படங்கள் பார்திருந்தாலும் கடைசியாக பார்த்தப் படத்தைப் பற்றி மட்டும் பார்ப்போம்.
ஃபிளாஷ் ஆப் ஜீனியஸ்


இப்படி ஒரு படம் தமிழிலோ அல்லது இந்திய மொழிகளிலோ எடுக்க முடியுமா என்று யோசித்துப் பார்த்தேன். என் சிறு அறிவிற்கு எட்டியவரையில் முடியாது என்று தான் நினைக்கிறேன். கீதப்பிரியன் மிக அழகாக அவருடைய பதிவில் எழுதியிருந்ததைப் பார்த்தேன். அந்த படத்தைப் பற்றிய சிறு விமர்சனம் மட்டும் பார்க்கலாம். 1953ல் அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணதில்(Detroit) ராபர்ட் கியேர்ன்ஸ்(Robert Kearns) என்ற பேராசிரியர் தன்னுடைய கல்யாண தினத்தன்று குடும்பதுடன் விருந்து சாப்பிடும் போது, ஷேம்பைன் பாட்டில் கார்க் அவர் இடது கண்ணில் பட்டு கண் கலங்கிவிடுகிறது. அந்த வலியுடன் காரில் வரும் போது நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது. அப்பொழுது, அந்த காரின் மழை நீரைத் துடைக்கும் கருவி(வைப்பர்) ஒரே நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒவ்வருமுறையும் இயங்குவதையும், அதில் இப்பொழுது இருப்பது போல் இல்லாமல் அது இயங்கும் இடைவெளியை கூட்டவோ குறைக்கவோ முடியாத நிலையில் இருந்தது. அவர் அதை ஆராய்ந்து, நமது கண் இமைகள் இயங்கும் நேரத்தையும் ஒப்பிட்டு ஒரு புது வைப்பரைக் கண்டு பிடிக்கிறார். முதலில் அதை அவருடைய வீட்டிலுள்ள மீன் தொட்டியில் சோதனை செய்து வீட்டிலுள்ளவர்களை வியப்பில் ஆழ்த்துகிறார்.

அவருடைய நண்பர் உதவியுடன் அதை ஃபோர்ட் கார் கம்பெனியில் தனது ஆராய்ச்சியை முன்னோட்டம் செய்து காண்பிக்கிறார். அதை ஏற்றுக் கொண்ட ஃபோர்ட் நிறுவனம் தங்களிடம் ஃபார்முலாவை நல்ல விலைக்கு கொடுக்குமாறு கேட்கிறது. ராபர்ட் அதை தானே தாயாரித்து தருவதாகக் கூறுகிறார். அதை ஃபோர்டும் ஒத்துக்கொள்ள அவரும் ஒரு கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து தாயாரிக்கும் முயற்சியில் இறங்குகிறார். சிறிது காலம் கழித்து ஃபோர்டிலிந்து எந்த அழைப்பும், தகவலும் வராததால், தற்செயலாக ஃபோர்ட் கன்வென்ஷன் செண்டரில் புதிதாக அந்த வருடம் வெளியிடும் மஸ்தாங்(Mastang) காரில் அவர் ஆராய்சியில் உருவான அந்த வைப்பர் பொருத்தப் பட்டு அதையே மூலக் காரணமாக வைத்து ஃபோர்ட் விளம்பரம் செய்துக் கொண்டிருப்பதையும் பார்க்கிறார். தன்னுடய ஃபார்முலா திருடப் பட்டிருப்பதை கண்டு ஆத்திரம் அடைந்து ஃபோர்ட் நிறுவனத்தின் மேல் வழக்கு தொடர்கிறார். ஃபோர்ட் சில ஆயிரங்களை(டாலர்ஸ்) தருவதாகவும் வழக்கை வாபஸ் வாங்க சொல்கிறார்கள். அவர் அந்த பணத்தை வாங்கி கொள்கிறேன், ஆனால் ஒரு நாளிதழில் அவருடைய பார்முலாவை ஃபோர்ட் திருடியதாக் ஒரு சின்னச் செய்தியைப் போடும்படி கேட்கிறார். ராபர்ட் வழக்கிலிருந்து அவருடைய வக்கில் வெளியேருகிறார். அவருடைய குடும்பமும் அவரை விட்டுப் பிரிகிறது. எந்த வக்கிலும் அவருக்காக வாதாட வரவில்லை. தன்னுடைய பேராசிரியர் பதவியைத் துறந்து தானே வாதாட முடிவெடுத்து 5 வருடம் சட்டம் படிக்கிறார். சட்டம் முடித்த பிறகு ஃபோர்ட் கம்பெனி மேல் அந்த வழக்கை தொடர்கிறார்.

இந்த தடவை 30 மில்லியன் டாலர்ஸ் ஃபோர்ட் தர விரும்புவதாகவும், ஆனால் எந்த மன்னிப்பும் கேட்க முடியாது என்றும் ஃபோர்டின் பிரதிநிதி கூறுகிறார். அதை ராபட் மறுக்கிறார். வாதம் தொடங்குகிறது. ஃபோர்ட் தலைசிறந்த வக்கில்களை வைத்து ராபட்டிற்கு எதிராக வாதடுகிறது. இந்த ஃபார்முலா(Pattern) ஏற்கனவே இருந்ததாகவும் அதைத்தான் ராபர்ட் வேறு முறையில் கொடுக்க நினைத்தார் என்றும் நீதிமன்றத்தை நம்ப வைக்கிறார்கள். ராபர்ட் இதற்கு முன்னால் எந்த பேட்டர்னில் இருந்தது, தான் எந்த பேட்டர்னில் கண்டுபிடித்து என்பதை டெக்னிக்கல் விளக்கத்துடன் கோர்ட்டுக்கு விளக்கம் கொடுக்கிறார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் ராபர்ட்டின் கண்டுபிடிப்பு அவருடையது தான், அதை ஃபோர்ட் திருடியது திட்டவட்டமாகத் தெரிகிறது என்றும், அதனால் 10.1 மில்லியன் டாலர்ஸ் அபராதம் ராபர்ட்டிற்கு ஃபோர்ட் கொடுக்கவேண்டும் என்று தீர்ப்பளிக்கிறது.
சில சுவாரஸ்யங்கள்
  • இந்த கதை ஒரு உண்மைச் சம்பவம். இன்றும் ஃபோர்ட் மேல் இந்த களங்கம் இருக்கிறது. ஆனால் என்ன காரணத்தினாலோ இந்த படம் உண்மை சம்பவத்தை 'தழுவி' எடுக்கப் பட்டது என்று டைட்டில் கார்ட்(Based on True Story) போடுகிறார்கள்.
  • ஃபோர்ட் நிறுவனத்திலே அந்த முன்னோட்டம்(Demonstration)எடுக்கப் பட்டிருக்கிறது. நம்ம ஊரில் ஒரு நிறுவனத்தைத் தாக்கி நேரிடையாக எடுக்க முடியுமா? எடுத்தால் அந்தப் படம் வெளிவருமா? மணிரத்னம் கூட குரு படத்தில் அம்பானி குடும்பத்தை மறைமுகமாத் தான் எடுத்திருப்பார்.
  • ராபர்ட்டிற்கு அழகான குடும்பம். அவருடைய ஆராய்சியை உற்சாகப் படுத்துத்துகிறார்கள். அவருடைய பிடிவாதத்தைக் கண்டு நட்புடன் பிரிந்து செல்கிறார்கள். இறுதியில் அவருடைய மண உறுதியைக் கண்டு அவருடைய பிள்ளைகள் எல்லோரும் அந்த வழக்கிற்கு உதவுகிறார்கள். வழக்கில் வென்ற பிறகு அவருடைய மனைவி மட்டும் நன்றி சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
  • இந்த வழக்கு முடிந்த பிறகு இதே ஃபார்முலாவை க்ரைசலர் கார்ப்பரேசனிற்கு(Chrysler Corporation) விற்று 18.7 மில்லியன் டாலர் பெற்றார்.
  • இந்த படத்தின் நீதிமன்றத்தில் வழக்கு வாதாடும் காட்சி மிக நேர்த்தியாகவும், சுவாரஸ்யமாகவும் எடுத்திருக்கிறார்கள். தீர்ப்பிற்கு முந்தய தினம் ஃபோர்டின் பிரதிநிதி ராபர்ட்டின் வீட்டிற்கு வந்து வழக்கில் இருந்து விலகிக் கொண்டால் 30 மில்லியன் டாலர்ஸ் தருவதாகவும், நாளை தீர்ப்பில் தோற்றால் நீங்கள் வெறும் கையுடன் தான் வீடு திரும்ப வேண்டும் என்று பேரம் பேசுகிறார். ராபர்ட் தன் குழந்தைகளிடம் அவருக்கு என்ன பதில் சொல்லலாம் என்று கேட்கிறார். குழந்தைகளும் ராபட்டிற்கு ஆதரவாகவே நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்கிறார்கள். ஒருவருடைய வெற்றி தோல்வி என்பது நம்மைச் சுற்றிஉள்ளவர்கள் கொடுக்கும் நம்பிக்கையில் தான் பாதி இருக்கிறது என்பதை இது விளக்குகிறது.
  • நம்மிடம் உண்மை / நேர்மை / உறுதி இருந்தால் எத்தனை காலம் ஆனாலும் நீதி நமக்கு கண்டிப்பாக கிடைக்கும் என்பது இந்த படத்தில் நாம் தெரிந்துகொண்டது.

இந்த படத்தின் முன்னோட்டம், புகைப்படங்கள், நடித்தவர்கள் மற்றும் இயக்கியவர்களைப் பற்றி தெரிந்துக் கொள்ள இங்கே சொடுக்கவும்.


நம்முடைய இயக்குனர்களும் கொஞ்சம் மூளையைக் கசக்கினால் இந்த மாதிரி ஒரு தரமான படம் தமிழில் வருவதற்கு சாத்தியங்கள் உண்டு. கமல் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் சொன்னது போல் நல்ல படங்களை வரவேற்க தவறுவதில் ரசிகர்கள் பங்கும் உண்டு என்பது நிதர்சனமான உண்மை.

16 comments:

மாதேவி said...

படக்கதை முழுவதையும் அழகாகச் சொல்லியுள்ளீர்கள். படம் பார்த்த திருப்தியைத் தந்தது. நன்றி.

முத்துவேல் said...

மற்ற இரண்டு படம் பற்றி எப்ப எழுதுவ ?

Unknown said...

இது மாதிரி நீங்கள் ஒரு படம் எடுக்க எனது வாழ்த்துகள்

Menaga Sathia said...

உங்க விமர்சனம் அருமை.படம் பார்த்த திருப்தி வருது...

முரளிகண்ணன் said...

nice

M.S.R. கோபிநாத் said...

@ நன்றி மாதேவி. வருகைக்கு நன்றி.

@ ஒரு படம் பற்றி எழுதவே இரண்டு நாட்கள் எடுக்கிறது. இனி நிறைய விமர்சனம் எழுதலாம் என்று இருக்கிறேன். நன்றி முத்துவேல்.

@ நானும் படம் எடுக்கும் எண்ணம் உள்ளது. ஆனால் இப்பொழுது இல்லை. கண்டிப்பாக எதிர்காலத்தில். வாழ்த்துக்கு நன்றி

@ நன்றி மேனகா.

@ நன்றி முரளிகண்ணன்.

அரங்கப்பெருமாள் said...

சூப்பர்.. படம் பார்த்துடுவோம். இது மாதிரி நல்லப் படங்களைப் பற்றி அப்பப்போ எழுதுங்க, கோபி..

M.S.R. கோபிநாத் said...

@ நன்றி பெருமாள். கண்டிப்பாக எழுதுகிறேன்.

kamesh said...

It really is a very good movie. I happened to watch this movie just week.

Ashok Muthiah said...

Very good story told in a nice manner..it's insisting me to watch the movie..Probably Shankar's future movie would be based on this..:-)

M.S.R. கோபிநாத் said...

@ நன்றி காமேஷ்.

@ நன்றி அசோக். டிவீடி கிடைத்தால் பாருங்கள்.

ஹேமா said...

படத்தைப் பார்க்கத் தூண்டும் விமரசனம்.எங்கள் படங்கள் வியாபார நோக்கில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது கோபி.

geethappriyan said...

அருமை நண்பர் கோபிநாத் மிக அருமையான சினிமாப்பார்வை, படத்தில் நீங்கள் லயித்தது நன்றாக தெரிகிறது,எழுத்தும் அருமையாக வெளிப்பட்டிருக்கிறது. வாழ்த்துக்கள்,

//
நம்முடைய இயக்குனர்களும் கொஞ்சம் மூளையைக் கசக்கினால் இந்த மாதிரி ஒரு தரமான படம் தமிழில் வருவதற்கு சாத்தியங்கள் உண்டு. கமல் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் சொன்னது போல் நல்ல படங்களை வரவேற்க தவறுவதில் ரசிகர்கள் பங்கும் உண்டு என்பது நிதர்சனமான உண்மை. //

மிகவும் உண்மை, தொடர்ந்து கலக்கவும்.

pudugaithendral said...

நம்முடைய இயக்குனர்களும் கொஞ்சம் மூளையைக் கசக்கினால் இந்த மாதிரி ஒரு தரமான படம் தமிழில் வருவதற்கு சாத்தியங்கள் உண்டு//

50 வயசானுலும் டூயட் பாடி கல்லாவை நிறப்ப நினைக்கும் ஆளுங்க தான் இங்க ஜாஸ்தி,
(இன்னமும் தன்னை யூத்தா தான் காட்டிக்க நினைக்கறாங்க.)
அமிதாபின் சீனி கம், பூத்நாத் மாதிரி வித்யாசமா நடிக்க யாரும் முயற்சி செய்வாங்களா? டிசம்பர் 4 வெளியாகப்போகும் “பா” நம்மாளுங்களை பார்க்க வைக்க வேண்டும்.

M.S.R. கோபிநாத் said...

@ வாங்க ஹேமா. வியாபர நோக்கத்தில் எடுத்தாலும் கொஞ்சமாவது தரம் வேண்டாமா?. நன்றி ஹேமா.

@ நன்றி கார்த்திக்கேயன். வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

@ நன்றி புதுகைத் தென்றல். வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. சரியாக சொன்னீர்கள். நானும் உங்களைப் போலவே "பா" படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

ஹேமா said...

தூரங்கள் கூடத்தான்.என்றாலும் நட்போடு கை கோர்த்துக் கொள்கிறேன் அன்போடு.பிந்தினாலும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கோபி.என்றும் சந்தோஷமாய் இருக்கணும்.