”சின்னக் கண்ணம்மா” படத்தில் வரும் இந்தப் பாடலை அலுவலகம் விட்டு காரில் வரும் பொழுது கேட்டேன். இவ்வளவு அற்புதமான பாடலைக் கேட்டு எவ்வளவு நாட்களாகி விட்டது. மனதை வருடும் பாடல் இது. வீட்டிற்கு வந்து உடனே யூ-ட்யூபில் இந்தப் பாடலைப் பார்த்தேன். ஆகா.. தலைவர் மேஸ்ட்ரோவின் கொள்ளை கொள்ளும் மெலடி, கார்த்திக்கின் நடிப்பு, பேபி ஷாமிலியின் கொஞ்சல், பாடல் எடுத்தவிதம் அவ்வளவு அருமை.இந்த பாடல் வரிகள் கேட்டால் உங்களுக்கும் இந்த பாடல் பிடிக்கும்.
எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல
பூக்களின் வண்ணம் கொண்டு
பிறந்த மகளே என் மகளே!
நான் வாழ்ந்தது கொஞ்சம்,
அந்த வாசத்தில் வந்துதித்து
உயிரில்கலந்தாய் என் உயிரே!
உன் பூவிழி குறுநகை!
அதில்ஆயிரம் கவிதையே..!
வானம் தாலாட்ட, மேகம் நீராட்டவளரும் வெள்ளி நிலவே!
வாழ்வில் நீ காணும் சுகங்கள் நூறாக
வேண்டும் தங்கச் சிலையே!
தாயின் மடிசேரும் கன்று போலநாளும் வளர்வாய் என் மார்பிலே!
சேய் உன் முகம் பார்க்க துன்பம் தீரும்
காலம் கனியாகும் தேவியே!
சிறுகிளி போல் பேசும் பேச்சில்
எனை மறந்தேன் நானம்மா...!
கனவில் நினைவாக நினைவில் கனவாககலந்தால் காதல் தேவி..
உறவின் பலனாக கடலில் அமுதாக
பிறந்தாய் நீயும் கனியே!
காணக் கிடைக்காத பிள்ளை வரமேகண்ணில் ஜொலிக்கின்ற வைரமே..!
கோடி கொடுத்தாலும் உன்னைப் போல
செல்வம் கிடைக்காது வாழ்விலே
புள்ளி மானே தூங்கும் மயிலேஎன்னை மறந்தேன் நானம்மா...
(எந்தன் வாழ்க்கையின்)

படம் : சின்னக் கண்ணம்மா
இசை : இளையராஜா
பாடியவர் : மனோ
காணொளியைக் காண இங்கே சொடுக்கவும்.
