Friday, September 18, 2009

சைபர்கிரிமினல்கள்-டாப்-8 !!

சைபர் கிரைம் பற்றி நாம் படித்திருப்போம். கம்ப்யூட்டரும் கிரெடிட் கார்ட் வர்த்தகத்திலும் இந்த மோசடிகள் அதிகம் நடக்கிறது. உலகம் செல்லும் பொருளாதாரப் பாதையில் நாமும் செல்லவேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்.

உலக அளவில் சைபர்கிரைம் என்பது பல நிறுவனங்களின் பொருளாதாரத்தைக் கூட பாதிக்கும் என்பது அதிர்ச்சியான ஒன்று என்றாலும் இப்படிப்பட்ட செயல்களை நாம் ஆங்கிலப் படங்களிலும் செய்திகளிலும் காண்கிறோம். இதனைப் பற்றி அறிவது மிகவும் அவசியமாகத்தெரிகிறது.

மிகவும் பயங்கரமான சைபர் கிரைம்கள்பற்றிப் பார்ப்போம்.

1.கோடியாக்-KODIAK- கோடியாக் மிகவும் புத்திசாலித்தனமாக மிகப் பெரும் பணக்காரர்களின் வங்கிக்கணக்குகளில் இருந்து பணத்தை எடுத்து பல நாடுகளிலும் போலி கம்பெனிகளின் பெயரில் மாற்றிவிட்டான். அவன் மாற்றிய தொகை $10.7 மில்லியன். அப்புறம் என்ன? மூன்று வருட ஜெயில் தண்டணை அனுபவித்தான்!

2.டான் ஃபனுச்சி-DON FANUCCI-இவன் தன் சைபர்கிரைம் வேலைகளை ஆரம்பிக்கும்போது வயது 15 தான். பிப்ரவரி 2000 ல் மிகவும் பிரபலமான வணிக இணைய தளங்களின் மீது தன் கைவரிசையைக் காட்டினான். இதனால் பல நிறுவனங்களுக்குக் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டது. செப்டம்பர் 2001 ல் வீட்டுக்காவலில் எட்டுமாதம் வைத்தனர்.பெருந்தொகை அபராதமும் விதிக்கப்ப்பட்டது. இவனுக்கு இண்டெர்நெட் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. உலகம் முழுக்க $7.5 மில்லியனிலிருந்து $1.2 பில்லியன் இழப்பு இவனால் ஏற்பட்டது.

3.POX-பாக்ஸ்- Love Bug-I love you- என்ற பிரபலமான ஈமெயில் வைரஸை உருவாக்கியவர்களில் ஒருவன். இவனுடைய இந்த வைரஸ் பெண்டகன் ,C I A கம்ப்யூட்டர்களையே தாக்கியது என்றால் பாருங்கள்! மே 4 2000 ல் 50 மில்லியன் கம்ப்யூட்டர்கள் இவனால் செயலிழந்தன. பாக்ஸ் பிலிப்பைன்ஸில் இருப்பதால், அந்தநாட்டில் கம்ப்யூட்டர் ஹேக்கிங்க் சட்டங்கள் எதுவும் இல்லாததால் எந்த தண்டணையும் இல்லாமல் சுகமாக வாழ்கிறான்!

4.MISHKAL-மிஷ்கல் Eastern European carding rings என்ற அமைப்பில் ஒருவன் என கருதப்படுகிறது. போலி கிரெடிட் கார்ட், டெபிட் கார்டுகள் கோடிக்கணக்கில் தயாரிப்பதுதான் தொழில். தொழிலின் உச்சத்தில் இருக்கும்போது இவனுடைய ஒருநாள் வருமானம் எவ்வளவு தெரியுமா? $100,000!!!! கடைசியில் கைது செய்யப்பட்டு வெறும் ஆறு மாதம் மட்டும் ஜெயிலில் கழித்தான். உடனடியாக நம் ஊரைப்போல் உக்ரைன் அரசில் பிரதிநிதியாகிவிட்டான்.

5.THE WIZ AND PIOTREK- இருவரும் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள்! 50000 கிரெடிட் கார்டுகளின் தகவல்களைத் திருடி கோடிக்கணக்கில் சம்பாதித்தனர் இருவரும். இருவருக்கும் மூன்று வருட சிறைத்தண்டணையும், அபராதமும் விதிக்கப்பட்டது.

6.Roper, Red_Skwyre, and Dragov-ரோபர்,ரெட்ஸ்கையர்,ட்ராகோவ்- இவர்களும் சைபர்கிரைம் கில்லாடிகள். இவகளால் 40 மில்லியன் பவுண்டுகள் நஷ்டம் ஏற்பட்டது. 2007 அக்டோபரில் பிடிபட்ட இவர்களுக்கு எட்டு ஆண்டு சிறைத்தண்டணை விதிக்கப்பட்டது!

7.BANDIT-பண்டிட் - இவன் 500000 கம்ப்யூட்டர்களை ஹாக் செய்து அவற்றைத் தன் தவறான செயல்களுக்குப் பயன்படுத்தி பணம் பார்த்துவந்தான்.2005 நவம்பரில் கைது செய்யப்பட்ட இவனுக்கு ஐந்துவருட ஜெயில் தண்டணை வழங்கப்பட்டது. மிலிட்டரி கம்ப்யூட்டர்களில் இவன் கைவரிசையைக் காட்டியதால் அமெரிக்க அரசாங்கத்துக்கு $15000 பணம் செலுத்தினானாம்!!

என்ன இந்தியாவில் எதுவும் நடக்கவில்லையா? என்கிறீர்களா? இருக்கு! அதற்காக ஒரு கொசுறு:

8.Li Chen Sien , Wynne Peter- இந்தியாவில் இந்த இருவரும் 56540 பவுண்டுகளை இன்சூரன்ஸ் நிறுவனத்திலிருந்து நெட் வழியாக சுட்டதால் 2009 பிப்ரவரியில் நோய்டாவில் கைது செய்யப்பட்டனர்.

கிரெடிட் கார்டுகளிலும், இண்டெர்நெட் வங்கிகளிலும் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. பெருகிவரும் இந்த வசதிகளால் சைபர்கிரைம்களும் அதிகரிக்கத்தான் செய்யும்!! அவற்றிலிருந்து நாம் நம்மைக் காப்பாற்றிக் கொள்ளும் வழிகளை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்!!

3 comments:

APSARAVANAN said...

Romba mukkiyamaana vishayam. Thanks for the post.

Ashok Muthiah said...

Indiavla internet/hacking laws ellam entha alavukku irukku...any related info. abt indian cyber criminals can also be added..

Ashok Muthiah said...
This comment has been removed by a blog administrator.