Wednesday, September 9, 2009

நான் நானாகவே!

என்னை பற்றிய சுய விமர்சனம்.

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

எனக்கு முதலில் வைத்த பெயர் சொக்க நாதன் (என்னுடைய தாத்தா பெயர்). பிறகு என் பெற்றோர்கள் என்ன நினைத்தார்களோ என்னுடைய பெயரை கோபிநாத் என்று மாற்றி விட்டார்கள். நான் 2003 ஆண்டு numerology படி என்னுடைய பெயரை கொஞ்சம் திருத்திக் கொண்டேன். என்னுடைய பெயர் எனக்கு ரெம்ப பிடிக்கும்.

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

Taare Zameen Par என்ற ஹிந்தி படம் climax என்னை மிகவும் பாதித்து கண் கலங்கிவிட்டேன் .

3. உங்களோட எழுத்துக்கள் உங்களுக்கு பிடிக்குமா?

கண்டிப்பாக. என்னுடைய தமிழ் எழுத்துக்கள் நன்றாக இருப்பதாக எல்லோரும் சொல்வார்கள்.

4. பிடித்த மதிய உணவு என்ன?

செட்டிநாடு சிக்கன் குழம்புடன் சாதம்.


5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

ரெம்ப யோசித்து தான் ஒருவருடன் பழக ஆரம்பிப்பேன் . நானாக வலிய சென்று பேசியது ரெம்ப குறைவு.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

என்னுடைய
ஊர் குற்றாலம் பக்கத்தில் இருப்பதாலோ என்னவோ எனக்கு அருவியில் குளிக்க தான் பிடிக்கும். நான் சென்னையில் 10 வருடங்களுக்கு மேல் வசித்திருக்கிறேன். ஒரு தடவை கூட கடலில் குளித்து
கிடையாது.

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

முதலில் தோற்றம்(Appearance). அவருடைய Attitude மற்றும் Behaviors.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

பிடித்த விஷயம் பொறுமை. பிடிக்காத விஷயம் சோம்பல் .

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

பிடித்த விஷயம் : எல்லாத்துலயும் கரெக்டா இருக்கிறது.
பிடிக்காத விஷயம் : காரணம் இல்லாமல் வரும் முன்கோபம்.

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

என்னுடைய தாய் மாமா செல்வராஜ் அவர்கள்.

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

சாம்பல்
நிற T.Shirt மற்றும் Blue Jeans Pant.

12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?

இளையராஜாவின் இசை வெள்ளம் என்னுடைய iPod லிருந்து .

13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

எனக்கு பிடித்த நீலக் கலர்.

14. பிடித்த மணம்?

வாசனை பூக்களின் மணம்.

15. பிடித்த விளையாட்டு?

கிரிக்கெட்
, Carom, Tennis, கோலி, பம்பரம் , கில்லி.

16. கண்ணாடி அணிபவரா?
ஆம்
.

16. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?

நான் திரைப்படங்களின் மிக பெரிய ரசிகன். நாவல்களை படமாக்குவது மிக பெரிய திறமை வேண்டும். அந்த மாதிரி திரை படங்கள் ரெம்ப பிடிக்கும். என்னை பொறுத்தவரை திரை படங்கள் மிக இயற்கையாக இருக்கவேண்டும். இது பற்றி பின்னர் விரிவாக எழுதுகிறேன்.

17. கடைசியாகப் பார்த்த படம்?

தமிழில் "பொக்கிஷம்" ,ஆங்கிலத்தில் Angels & Demons, ஹிந்தியில் Rab Ne Bana Di Jodi.

18. பிடித்த பருவ காலம் எது?

இலையுதிர் காலமும் (Falls), குளிர் காலமும் (Winter)

19. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

தமிழ் புத்தகம் படித்து வெகு நாட்கள் ஆக்கிவிட்டது. வாராவாரம் ஆனந்த விகடன் , ஜூனியர் விகடன் படிப்பேன்.

20. உங்கள் டெஸ்க்டாப்ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

Desktop படங்கள் எல்லாம் நான் எடுத்த புகைபடங்களாக இருப்பதால் அடுத்த நல்ல படம் கிடைக்கும் வரை வைத்திருப்பேன்.

21. பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

பிடித்த சத்தம் குழந்தையின் சிரிபொலி . பிடிக்காத சத்தம் குழந்தையின் அழுகை.

22. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

முதன் முதலில் சிங்கப்பூர். இப்பொழுது அமெரிக்கா

23. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

இன்னும் கண்டு பிடிக்க முயற்சிக்க வில்லை.

24. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

காங்கிரஸ் கட்சி ஈழ தமிழர்களை இப்போது வரைக்கும் கண்டு கொள்ளாமல் இருப்பது.

25. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

சோம்பல் என்ற சாத்தான்.

26. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

இந்தியாவில் குற்றாலம். வெளிநாட்டில் சுவிற்சர்லாந்து.

27. எப்படி இருக்கணும்னு ஆசை?

உயர்ந்த லட்சியங்களுடன்

28. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

வாழு , வாழ விடு

29. மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
நண்பர்களுடன் அரட்டை அடிக்க ரெம்ப பிடிக்கும்.


3 comments:

அரங்கப்பெருமாள் said...

என்ன சொக்கா... அப்பிடின்னுக் கேட்டால், சட்டையின் BRAND சொல்லுவீர்களா அல்லது நீங்களும் என்ன அப்பிடின்னு கேப்பிங்களா?

சிங்கப்பூர் அப்பறம் அமெரிக்கா, நானுந்தாங்கோ..

Yathes Photos said...

Nice one to read and let you know your activities and interesting areas.

Anonymous said...

very very interesting to read. - Prabhu,Chennai.