Monday, November 30, 2009

ஓட்டவாய் மாரிமுத்து பக்கங்கள் - 01/12/2009

டீல் (ஆர்) நோ டீல்


ஒரு வழியாக “நன்றி தெரிவித்தல் நாள்” முடிந்தது. ஒரு நாளைக்கு முன்னதாகவே நண்பர் ஜெய் வீட்டுக்கு சென்றுவிட்டோம். அன்று இரவு ஜெய் வீட்டிலும், துரை வீட்டிலும் சேர்ந்து சமைத்து பரிமாரினார்கள். அன்பையும் சேர்த்து தான். மறுநாள் யாருக்கெல்லாம் என்ன வாங்கலாம் என்று நீண்ட நேரத்திற்குப் பின் முடிவானது. அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கடைக்குச் சென்று அவர்கள் வாங்க நினைத்தையும், நண்பர்களுக்கு அந்த கடையில் வாங்க நினைத்ததையும் ஒரு முறைக்கு இரு முறை சரிபார்த்துக் கொண்டோம். இரவு கொஞ்சம் நேரம் இருந்ததால் மலைக்கோட்டைப் படம் நான்கு குடும்பமும் ’போஸ்(Bose)’ ஹோம் தியேட்டரில் பார்த்தோம். அதிகாலை நான்கு மணிக்கு முடிவானது, நாலரை மணியானது கிளம்புவதற்கு. முதலில் வால்மார்ட் சென்றோம். எனக்கு நான் எதிர்பார்த்த ஒன்றும் கிடைக்கவில்லை. நண்பர்கள் டீலில் கிடைத்த சில பொருட்களை வாங்கினார்கள். நாங்கள் செல்வதற்கு முன்பே மார்ட் திறந்திருந்தால் நீண்ட வரிசை பில் போடுவதற்காக நின்றுக் கொண்டிருந்தது. அடுத்து சில கடைக்களுக்கு சென்று நோட்டமிட்டோம். சில எலக்ட்ரானிக்ஸ் மற்றும் குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்கள் வாங்கினோம். போன வருடத்தை ஒப்பிடும் போது இந்த வருடம் அவ்வளவாக டீல் இல்லை. காலை உணவுக்கு வாஃபல் ஹவுஸ்(Waffle House) சென்றோம். திவ்யமான காலை உணவு. காபிக் கோப்பையை நிரப்பிக் கொண்டே இருந்தார்கள்.

பிறகு ’பெஸ்ட் பை’(Best Buy) சென்றோம். சாதாரண நாட்களில் இருக்கும் விலையைத் தான் விலை குறைத்து டீல் தருவதாக “ஹைலைட்” கொடுத்து மொத்தமாக குவியலாக வைத்திருந்தார்கள். விவரம் தெரியாதவர்கள் கார்ட்டில்(Cart) அள்ளிக் கொண்டு போனார்கள். எல்.சி.டி (LCD)டீவி போய் எல்.இ.டீ(LED) டீவி மார்க்கெட்டில் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. போன வருடம் புது வரவாக இருந்த ப்ளுரே(Blu-ray)-டிவிடி ப்ளேயர்கள் இந்த வருடம் கணிசமாக விலைக் குறைந்ததை காணமுடிந்தது. டிஜிட்டல் கேமராக்களும், சில எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உண்மையில் விலை குறைந்திருந்தது. அதெல்லாம் மார்க்கெட்டில் அவுட்டேட் ஆகியிருந்ததால் வாங்க ஆளில்லை. இந்த வருடம் குளிரும் மிக குறைவாகவே இருந்தது. அமெரிக்காவில் பெரும்பாலான கம்பெனிகளில் ஆட்குறைப்பு இன்னும் நடந்துக் கொண்டிருப்பதால் மக்களிடம் பணப்புழக்கம் மற்ற ஆண்டுகளை விட இந்த ஆண்டு கொஞ்சம் குறைவு என்பதை ஒவ்வொரு கடையிலும் கூட்டம் குறைந்திருப்பதன் மூலம் பார்க்க முடிந்தது. நம்ம ஊரில் புது படங்களுக்கு பிளாக்கில் டிக்கெட் விற்ப்பது போல் இங்கும் அதிகாலை ஒருமணியளவில் வரிசையில் நின்று முதல் இருபது பேருக்குக் கிடைக்கும் லேப்டாப்களை பிளாக்கில் விற்றார்கள்.

மதியம் ’டி.ஜி.ஐ. ஃபிரைடே’(T.G.I Friday) ஹோட்டலுக்குச் சென்றோம். ஒரு ஆப்ரிக்கன் அமெரிக்கன் பணிப்பெண் அன்புடன் வரவேற்று எங்களை அமர வைத்தார். நம்மூர் போலில்லாமல் தண்ணீரைக் கூட கேட்டுத்தான் பெறவேண்டியிருக்கிறது. மெயின்கோர்ஸ் ஆர்டர் எடுத்துக் கொண்டாள். எல்லோருக்கும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஸ்பைஸியாக வேண்டும் என்று சொன்னோம். சிறிது நேரம் கழித்து உணவைச் சமைக்கும் செஃப்(Chef) எங்கள் டேபிளிற்கு வந்து மண்டியிட்டு உட்கார்ந்து நீங்கள் கொடுத்திருக்கும் ஆர்டர்களில் ஸ்பைஸி சேர்த்தால் அவ்வளவு நன்றாக இருக்காது. உங்களுக்கு ஸ்பைஸியாக வேண்டும் என்றால் மெனுவில் வேறு சில அயிட்டங்களை நீங்கள் தேர்வு செய்யலாம் என்று அன்புடன் கேட்டார். நாங்கள் ஸ்பைஸி இல்லை என்றால் பரவாயில்லை. நாங்கள் தேர்வு செய்த உணவையே உரப்பில்லாமல் கொடுங்கள் என்று கேட்டோம். சுடச்சுட ஆவி பறக்க மதிய உணவு எங்கள் மேசைக்கு வந்தது. அப்பொழுது ஜெய் நிறைய ஹோட்டல்கள் பணப்புழக்கம் இல்லாமல் மூடப்படுவதாக சொன்னார். ஹோட்டல்கள் மூட்ப்படுவதால் வாடிக்கையாளர்களைக் கவர அந்த செஃபே நேரிடயாக வந்து நம்மிடம் பேசுவதாகவும் சொன்னார். நாங்களும் ஆமோதித்தோம். அந்த பனிப்பெண்ணிற்கு 18% டிப்ஸ் கொடுத்துவிட்டு நகர்ந்தோம்.


அடுத்து உடைகள் எடுப்பதற்காக மேஸிஸ் சென்றோம். ஆண்கள் பகுதிக்குச் சென்று தேடினோம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை எந்த டீலும் இல்லை. சாதாரணமாக வார இறுதி நாட்களில் கிடைக்கும் டீல் கூட பிளாக்பிரைடேயில் கிடைக்கவில்லை என்பது இந்த வருட ஆச்சர்யம். மேஸிஸ் சென்று ஒன்றும் எடுக்காமல் வெறும்கையுடன் திரும்பினேன். ஆக மொத்தம் இந்த வருட பிளாக்ஃபிரைடே ‘நோ டீல்’ஆகத்தான் எனக்கு முடிந்தது. ஒரு குட்டித் தூக்கத்திற்குப் பிறகு ‘ஏகன்’ படத்துடன் இரவு உணவு எடுத்துக் கொண்டோம்.



8 comments:

Menaga Sathia said...

நல்லா எஞ்சாய் பண்ணிருக்கிங்கன்னு உங்க பதிவை பார்த்தாலே தெரியுது.

M.S.R. கோபிநாத் said...

@ நன்றி மேனகா.

Prathap Kumar S. said...

நல்ல என்ஜாய் பண்ணிருக்கீங்க...
ஆனா இடையிடையே நீங்க ஏன் மொக்கை படங்களாக பார்த்திருக்கீங்க... மலைக்கோட்டை, ஏகன் என்ன இதெல்லாம்... எப்படி முடியுது உங்களால.....

M.S.R. கோபிநாத் said...

@ கோவிச்சுக்காதிங்க பிரதாப். நண்பர்களின் கட்டாயத்தின் பேரில் பார்த்தது. மெஜாரிட்டி மக்கள் அன்று அது தான் பார்க்க வேண்டும் என அடம்பிடித்தார்கள். அடுத்தவங்க சந்தோசம் தானே நம் சந்தோசம். நன்றி பிரதாப்.

ஹேமா said...

கோபி,கொஞ்சம் பொறாமையாவும் இருக்கு.சரி...சரி சந்தோஷமா இருங்க.

M.S.R. கோபிநாத் said...

@ நன்றி ஹேமா

அரசூரான் said...

ஏங்க கோபி... பிளாக் ஃபிரைடேல பிளாக்குல வித்தா தப்பா? அத போயி பி-லாகுல போட்டு ரொம்ப பீஃல் பண்ணியிருக்கீங்க !!!

M.S.R. கோபிநாத் said...

@ வாங்க அரசூரான். பிளாக்குல வித்து நம்ம ஊர்ல தான் மானத்த வாங்குறாங்க..இங்கேயுமா(பணம் கொழிக்கும் நாட்டில்)? வருகைக்கு நன்றி.