இத்தொடரை எழுத அழைத்த தோழி மேனகாவிற்க்கு என் மனமார்ந்த நன்றி!!
இத் தொடர் இடுகையின் விதிகள்:
1. நமக்கு பிடித்தவர், பிடிக்காதவர் பட்டியலில் வருபவர் தமிழகத்தைச் சார்ந்த, பிரபலமாக இருக்க வேண்டும்
2. இதைத் தொடர இரண்டு முதல் ஐந்து பதிவர்களை அழைக்க வேண்டும்
3. ஏழு முதல் பத்துக் கேள்விகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
எனக்கு எல்லாத் துறையிலும் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களைப் பிடிக்கும்/பிடிக்காது என்பதால் ஒன்றோடு நிறுத்திக் கொள்ளாமல் எல்லோரையும் குறிப்பிட்டுள்ளேன்.
கவிஞர்
பிடித்தவர் – வைரமுத்து, வாலி, பா.விஜய், அப்துல் ரகுமான், மு.மேத்தா.
பிடிக்காதவர்- எல்லாக் கவிஞர்களும் தமிழை வளர்ப்பதால் பிடிக்காதவர் என்று யாரும் கிடையாது.
பூ
பிடித்தது - ரோஜா,மல்லிகைப்பூ, தாமரை
பிடிக்காதது- எல்லாப் பூக்களுமே இறைவனின் கொடை.
இயக்குனர்
பிடித்தவர்- மகேந்திரன், தங்கர் பச்சான், கே.விஸ்வநாத், பாலா, மணிரத்னம்
பிடிக்காதவர்- ஷங்கர், பேரரசு,
அரசியல்வாதி
பிடித்தவர்- கலைஞர்(ஈழத் தமிழர் விஷயத்தில் ஏமாற்றியதைத் தவிர),வை கோ, தயாநிதி மாறன்,
பிடிக்காதவர்- ஜெயலலிதா, ராமதாஸ்(டம்மி பீசு),விஜயகாந்த்(பாடி ஸ்ட்ராங்கு, பேஸ்மென்டு வீக்கு)
விளையாட்டு
பிடித்தது - கிரிக்கெட், டென்னிஸ், கில்லி, பம்பரம்
பிடிக்காதது - எல்லா விளையாட்டுமே உடம்பிற்கும் மனதிற்க்கும் எதோர் வகையில் உதவுகிறது.
நடிகை
பிடித்தவர் - ஜோதிகா, அனுஷ்க்கா
பிடிக்காதவர் - ஸ்ரேயா(யாராவது தயவுசெய்து நடிப்புன்னா என்னனு சொல்லிக் குடுங்கப்பா)
நடிகர்
பிடித்தவர்- கமல், ரஜினி, விக்ரம், பிரகாஷ் ராஜ்.
பிடிக்காதவர்- எஸ்.ஜே.சூர்யா, லாரன்ஸ் ராகவேந்திரா,
பேச்சாளர்
பிடித்தவர்- சு.கி. சிவம், சாலமன் பாப்பையா
பிடிக்காதர்-விஜய டிராஜேந்தர்
எழுத்தாளர்
பிடித்தவர்- ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், பாலகுமாரன்,சுஜாதா,ஞாநி
பிடிக்காதவர்- சாருநிவேதா.
இசையமைப்பாளர்
பிடித்தவர் - என்றும் இளையராஜா
பிடிக்காதவர்- சபேஷ் முரளி,இமான்
நான் அழைக்கும் பதிவர்கள்
1. எண்ணங்கள்
2. Tamil Film Critic
3. தமிழ்க்குடில்
4. வானம் வெளித்த பின்னும்
5. என் சமையல் அறையில்
8 comments:
சும்மா.. எல்லா பதில்களும் கன்னா இருக்கு!
நல்லாயிருக்கு உங்க பதில்கள்!!
கோபி,அதென்ன பிடிச்சவங்களச் சொல்லுங்கன்னா ஒருத்தரைத்தானே சொல்லணும்.பிடிச்சவங்க எல்லாரையும் சொல்றதில்ல.ஸ்ரேயா என்ன பண்ணினா உங்க எல்லாருக்கும்.பாவம் அவ ஒரு சொட்டுத் துணியோட ரஜனியோடயே நடிச்சிட்டா !
நன்றி கோபி.தொடருக்கு ஏற்கனவே அழைப்புகள் இருக்கு.இப்போ நீங்களும் சேர்ந்து.சரி ஏனோ இந்தத் தொடரும் ,தீபாவளித் தொடரும் தேவையான தொடராகத் தெரியவில்லை.என்றாலும் முயற்சிக்கிறேன்.நன்றி.
@ நன்றி கலையரசன். வருகைக்கு நன்றி.
@ நன்றி மேனகா.
@ ஹேமா, நடிகைகளுக்கு அழகு மட்டும் பத்தாது நடிக்கவும் தெரியவேண்டும். நடிக்கத் தெரியாதவர்கள் தான் முன்னனி நடிகைகளாக இருக்க வேண்டும் என்பது தமிழ் திரையுலகிற்கு கிடைத்த சாபம் என்று நினைக்கிறேன்.
nallaa irukku unga pathil!
@ வாங்க சுஸ்ரி. வருகைக்கு நன்றி.
ரசனையான பதில்கள்.
என்னை இந்த பதிவிற்கு அழைத்தமைக்கு மிகவும் நன்றி கோபிநாத்.
கடந்த வாரம் வீட்டில் குழந்தைக்குகாதுகுத்தல் என்பதால் கொஞ்சம் பிஸியாகிவிட்டேன்..
இந்த வாரம் இதனை எழுதுகிறேன். மிகவும் நன்றி.
அன்புடன்,கீதா ஆச்சல்
Post a Comment