Wednesday, October 7, 2009

நானும்... என் சினிமாவும்...

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

எனக்கு நினைவு தெரிந்து நான் பார்த்தப் படம் "16 வயதினிலே"(1977)என்று நினைக்கிறேன். அம்மா,பாட்டி,பக்கத்து வீடு என்று ஒரு புடை சூழப் போன படம். சின்ன வயதில் நிறையப் படம் பார்ப்பதுண்டு(இப்ப மட்டும் என்ன குறைச்சல்..!). ரஜினி, கமல் போன்றவர்களின் ஆரம்ப காலப் படங்களைப் பார்த்து சினிமாவைப் புரிந்துக் கொண்டதாலோ என்னவோ இன்று வரை வேறு நடிகர்களை மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. நான் 6வது படிக்கும் போது வீட்டில் அனுமதி வாங்கித் தனியாக பார்த்தப் படம் "பாயும் புலி". அதற்க்கு அப்புறம் வீட்டிற்க்குத் தெரிந்தும்,தெரியாமலும் பார்த்தப் படங்கள் கணக்கில் அடங்காது.இதுல என்ன உணர்ந்திங்கன்னு கேட்டா இடைவேளையில் என்ன வாங்கி கொடுப்பாங்க என்ற நினைப்பிலேயே போயிடும்.


2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

கடைசியாக அரங்கில் பார்த்தத் தமிழ்ப் படம் "ஏகன்". அதற்க்கு அப்புறம் அரங்கிற்குப் போவதே இல்லை. இங்கே(அமெரிக்காவில்) தமிழ்ப் படம் திரையிடும் திரை அரங்குகளில் மட்டும் Sound System சரியாக இருப்பதில்லை. நம்ம ஊரு டூரிங் திரையரங்கைப் போல் அவ்வப்போது இடைவேளை விட்டு படத்தை ஓட்டுகிறார்கள். தமிழ்நாட்டில் இப்போது சாதாரணத் திரையரங்கில் கூட Dolby, DTS போன்ற Sound System வந்து விட்டது. இங்கு தமிழ், தெலுங்கு படங்களுக்காகவே சில திரைஅரங்குகள் இருக்கிறது. அங்கு தான் திரையிட முடியும். அதனால் திரை அரங்கிற்குப் போவதே இல்லை. மேலும் வீட்டில் Home Theater System இருப்பதால் பெரும்பாலும் வீட்டிலேயே எல்லாத் தமிழ் படங்களையும் பார்ப்பதுண்டு.


3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

பொக்கிஷம். இந்த படம் பார்ப்பதற்கு கொஞ்சம் பொறுமை வேண்டும். இனிமேல் சேரன் நடித்தால் எந்த படமும் பார்ப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். யாராவது அவரை நடிக்கவேண்டாம் என்று சொல்லுங்களேன்.பத்மப்ரியா நடிப்பு நன்றாக இருந்தது.


4. மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?

ஒன்றல்ல, பல படங்கள் இருக்கிறது. எங்கேயோ கேட்ட குரல், ஜானி, முள்ளும் மலரும், நாயகன்,மகா நதி, குணா, ஹேய் ராம், ரமணா,பருத்திவீரன்,அழகி,ஒன்பது ரூபாய் நோட்டு,தாரே ஜமீன் பர், அஞ்சலி.


5. அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்?

1.பாஷா பட விழாவில் ரஜினியின் பேச்சு அன்றைக்கு அரசியல் மாற்றம் ஏற்படுத்தியது.
2.ஈழ தமிழர்களுக்காக திரையுலகம் நடத்திய போராட்டங்கள் மக்கள் மனதில் கொஞ்சம் மாற்றத்தை ஏற்படுத்தினாலும், அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.



5. ஆ உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?

1.சிறுவயதில் பாலுமகேந்திரா படங்களில் கேமிரா கோணங்கள் பார்த்து வியந்திருக்கிறேன்.
2. அஞ்சலி,நாயகன்,தளபதி போன்ற படங்களில் இளையராஜாவின் ஸ்பெஷல் எப்ஃக்ட் (BGM).
3. P.C.ஸ்ரீராம் கேமிரா செய்த ஜாலங்கள்
4. ஏ.ஆர்.ரகுமான் வரவு. கிழக்கு சீமையிலே படத்திற்க்கு அவர் போட்ட வெஸ்டெர்ன் போக்ஸ்.
5.ரெட் ஒன் கேமிரா வரவு.


6. தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

நான் வாசிக்கிற முதல் விஷயமே அதானே. இப்பவரைக்கும் அதை கண்ணும் கருத்துமாக செய்துக்கிட்டு வரேன். இப்பகூட பாருங்க இந்த கேள்வி பதில் பதிவு போடுற எல்லா பதிவையும் படிச்சுக்கிட்டு தான் இருக்கேன். ஆனந்தவிகடனில் முதலில் வாசிப்பது சினிமா செய்திகள் தான்.

7. தமிழ் சினிமா இசை?

இசைன்னு சொன்னாலே அவரை தவிர என்னால வேற யாரையும் நினைக்க முடியல. இன்னும் அந்த பழக்கம் என்கிட்ட இருந்துக்கிட்டே இருக்கு செய்திதாள்களிலோ, வார இதழ்களிலோ, இணையத்திலோ அந்த பெயரையோ, புகைப்படத்தையோ பார்த்தாலே போதும். உடனே அதை எடுத்து பாதுகாப்பாக வச்சிக்கிறது வழக்கம். அப்படி அந்த பெயரில் என்னதாண்டா இருக்குன்னு கேட்டா தெரியல. அப்படி என்னத்த செய்துட்டாருன்னு கேட்டா என்னதான் செய்யலன்னு மனசுக்குள்ள இருந்து உடனே ஒரு கேள்வி வருது. பல நேரங்களில் நண்பர்களுடன் சண்டை வேற ;) அவரோட இசையை தவிர வேற இசை எல்லாம் கேட்க மாட்டியான்னு கேட்டா?! கேட்பேன். ஆனா அவரு தான் எனக்கு எப்பவும். அந்த அவரு வேற யாரும் இல்ல. நம்மோட "இசைஞானி இளையராஜா".



8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

என்ன கேள்வி இது? எல்லா மொழிப் படத்தையும் பார்ப்பதுண்டு. இந்தி,தெலுங்கு,மலையாளம்,கன்னட மொழி படங்கள் விமர்சனம் படித்தப் பிறகு பார்ப்பேன். ஆங்கில படங்கள் நிறைய பார்ப்பேன். என்னை தாக்கிய பல ஆங்கில படங்கள்

1.Abyss
2.Face Off
3.Forrest Gump
4.God Father(1,2,3)
5.Titanic
6.Troy
7.The Sixth Sense
8.Kill Bill(1,2)
9. Million Dollar Baby
10.Finding Nemo
11.The Great Debaters
12.The Last Samurai
13.Rocky(1,2,3,4,5)
14.Resident Evil(1,2)
15.Final Destination(1,2,3,4)

இன்னும் சில.


9. தமிழ் சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

மறைமுகத் தொடர்பு உள்ளது. தமிழ் படங்களை பார்ப்பதன் மூலமாக. அதை மீண்டும் செய்வேன். இதை செய்வதால் தமிழ்ச்சினிமா மேம்படும் என்று நினைக்கின்றேன்.

10. தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இப்போதைக்கு தமிழ் சினிமா கொஞ்சம் கஷ்ட காலத்துல இருக்கு. மக்கள் மசாலா, heroism, அடிச்சு போடுறது, பாட்டு, டூயட் என்பதை எல்லாம் கொஞ்சம் தள்ளி வைத்து உணர்வுகளை படங்களில் தேடுவதால் டைரக்டர்களும் விழித்து விட்டனர். அதுனால நல்லா இருக்கும்.


11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?


ரொம்ப சந்தோஷம். விட்டு போன மற்றும் பழைய நல்ல படங்களை பார்க்கலாம். அதை தான் இப்ப செய்துக்கிட்டு இருக்கேன் என்பது வேற விசயம். ஊடகங்களால் எனக்கு எந்த பாதிப்பும் இருக்காது. ஆனால் தமிழ் சினிமா இல்லை என்றால் ஊடகங்களுக்கு கண்டிப்பாக பாதிப்பு இருக்கும். தமிழ் சினிமாவை வைத்து அரசியல் செய்து கொண்டு இருக்கும் தலைவர்கள் வேறு துறையை தேட வேண்டியது இருக்கும். வருங்கால முதல்வரே என போஸ்டர் அடித்தே பிழைப்பை ஒட்டும் நபர்கள் பாதிக்கப்படுவார்கள். சினிமாவே இல்லையென்றால் சினிமா விருது வழங்கும் விழாவும் இருக்காது, அய்யோ நம் தமிழக அமைச்சரவை ரொம்பவே பாதிக்கப்படுமே.


12. தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

என்ன தமிழ் தொலைக்காட்சியில் சினிமா சம்பந்தப்பட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் இல்லாமல் அவனால் சுகந்திர, குடியரசு, தீபாவளி, ரம்ஜான், பொங்கல் தினங்களை போற்ற முடியாது. அது ஒன்னு தான் வருத்தம்.

கலைத்துறையில் இருந்து இத்தனை முதல்வர்களை உருவாக்கிய நாம், "சினிமா இல்லாமல்" நடக்குற கதையா?.



4 comments:

Unknown said...

abiyu nanum parthinkala? cooltamil.com parnka

Ashok Muthiah said...

Good Photos & info..

Recenta actors vs media, pirachinai pathi kelvi pattiruppenga there vivek is challenging whether media can run without cinema..

innoru aathangam we have great actors such as Kamal and Rajni in Tamil, there are lot of fans for them in Tamilnadu and South India, we know their talents...Why can't they perform some movies in between in Hindi so that people in all over india would know abt their talents and speciality..and it's possible that they can beat existing Hindi actors when they do hindi films continuously..appadi pannum pothu thamilarkalukkellam perumai thaane? Ithaipatti ungaloda karuthu enna..

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
M.S.R. கோபிநாத் said...

நன்றி அசோக். உங்கள் ஆதங்கம் புரிகிறது. நம்முடைய நாடு மொழிவாரியாக பிரிந்திருப்பதால் வரும் பிரச்சனை தான் இது. எல்லா நடிகர்களுக்கும் தங்கள் மொழியில் நடிக்கும் போது ஒரு Comfortable இருக்கிறது. மற்ற மொழியில் நடிக்கும்போது பணத்துக்காக மட்டும் நடிக்கிறார்கள். அங்குள்ள நடிகர்கள் பண்ணும் அரசியலும் ஒரு காரணம்.