Thursday, December 24, 2009

2010ல் செய்யவேண்டியவை

ஆரோக்கியம் / உடல் நலம்

1. தண்ணீர் நிறைய குடியுங்கள்.
2. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும், இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.
3. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.
4. தியானம், யோகா மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.
5. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.
6. 2009விட இந்த வருடம் நிறைய புத்தகம் படியுங்கள்.
7. ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.
8. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.
9. குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

தன்னம்பிக்கை / சுயமுன்னேற்றம்

10. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள். அவர்கள் பயணிக்கும் / மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.
11. எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.
12. உங்களால் முடிந்த அள்வு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.
13. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.
14. நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கணவு காணுங்கள்.
15. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது.
16. கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தை சிதைத்துவிடும்.
17. வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.
18. எப்பொழுதும் மகிழ்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.
19. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
20. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்.

சமூகம்.

21. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும், வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, கடிதம் மூலமாகவோ தொடர்புகொண்டிருங்கள்.
22. மன்னிக்கப் பழகுங்கள்.
23. 70 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.
24. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.
25. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள்.

வாழ்க்கை

26. உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.
27. ஒவ்வொரு நாளும் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.
28. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள்.
29. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, எது அழகை கொடுக்காதோ, நிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கிவிடுங்கள்.
30. எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.

23 comments:

சிங்கக்குட்டி said...

அருமை :-)

வரும் புது வருடம் உங்களுக்கு எல்லா நன்மைகளையும் கொடுக்க வாழ்த்துக்கள் :-)

அண்ணாமலையான் said...

நல்லா சொன்னீங்க நன்பா.. வாழ்த்துக்கள்.......

Prathap Kumar S. said...

அருமையாருக்கு கோபி... நான் பண்ணவேண்டிய விசயம் எல்லாமே இதுல இருக்கே... இதுல இருக்குறதுக்கு எல்லாமே எதிர்மறையாத்தான் பண்ணுறேன்... புத்தாண்டிலாவது இதைகடைபிடிக்க முயற்சிக்கிறேன்.
உங்க வலைப்பூவை க்ளோஸ் பண்ணா இதல்லாம் மறந்துரும்னு பிரின்ட் எடுத்துக்கிட்டேன் கோபி ரொம்ப நன்றி.

M.S.R. கோபிநாத் said...

@ வாங்க சிங்ககுட்டி. வருகைக்கும்,வாழுத்துக்கும் நன்றி.

@ வாங்க அண்ணாமலையான்.வருகைக்கும்,வாழுத்துக்கும் நன்றி.

@ வாங்க பிரதாப். நீங்க மட்டும் இல்லை. நானும் அப்படித்தான். புத்தாண்டிலாவது நமக்கு நல்லது நடக்குதானு பார்ப்போம். நன்றி பிரதாப்.

geethappriyan said...

முப்பதும் அருமையாருக்கு
முடிந்தவரை தொடர்வோம்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்

Unknown said...

2010ல் மஞ்சள் துண்டு மட(டா)திபதி டிக்கட் வாங்கியிருவாரு அப்படீன்னு நெனக்கிறேன்............வாங்கனும்

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Anonymous said...

அனைத்தும் அருமை.2010ல் செய்ய வேண்டியவைய்னு பார்த்த உடன் நான் பொரிய காரியம்னு நினைத்தேன்.ஆனால் தண்ணீர் நடக்க உறங்க என்று சுலபமான ஆனால் யாரும் இதகூட செய்ய முயற்சிகாத மனிதர்கள் இருக்கிறார்கள். என்பது உண்மை.நீங்கள் கூறிய அனைத்தயும் நான் செய்ய முயற்சிக்கிறேன். நன்றி.

அரங்கப்பெருமாள் said...

முயற்சி பண்ணுவோம் கோபி.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அகநாழிகை said...

முயற்சி பண்ணலாம். நல்ல விஷயம்தான்.

- பொன்.வாசுதேவன்

M.S.R. கோபிநாத் said...

@ வாங்க கார்த்திக்கேயன். உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

@ வாங்க உண்மை. வருகைக்கு நன்றி. நீங்க யாரைச் சொல்ரீங்க?. கலைஞரையா? உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

@ வாங்க அனானிமஸ். எல்லாம் செய்யக் கூடியதுதான். முயற்சி பண்ணலாம். வாழ்க்கையே முயற்சி தானே..

@ வாங்க பெருமாள். உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

@ வாங்க வாசுதேவன். வருகைக்கு நன்றி.

முத்துவேல் said...

தமிழ் புத்தாண்டில் இதை எழுதி இருக்கலாம்.

வாழ்த்துக்கள்.

சரவணன். ச said...

படிக்க நல்லாயிருக்கு ஆனா பின்பற்ற முடியுமான்னு தெரியல.

நினைவுகளுடன் -நிகே- said...

அருமை

M.S.R. கோபிநாத் said...
This comment has been removed by the author.
M.S.R. கோபிநாத் said...

@ முத்துவேல், நல்ல விஷயத்தை எப்போ சொன்னா என்ன... நன்றி.

@ வாங்க சரவணன். ட்ரைப் பண்ணிப்பாருங்க.. வருகைக்கு நன்றி.

@ வாங்க நிகே. வருகைக்கு நன்றி.

Thenammai Lakshmanan said...

// உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.
27. ஒவ்வொரு நாளும் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.
28. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள்.
29. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, எது அழகை கொடுக்காதோ, நிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கிவிடுங்கள்.
30. எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும். //

super fives GOPI

நல்லா இருக்கு கோபி

புத்தாண்டு வாழ்த்துக்கள்

ஹேமா said...

எல்லாம் நல்ல விஷயங்கள்தான் கோபி.தூங்குறது ,சாப்பிடுறது புத்தகம் படிக்கிறது ,யோகான்னு நீட்டுக்குச் சொன்னா என்ன பண்றது.
முடியறதைச் சொல்லித் தாங்க.

புத்தாண்டு இனிதாய் பிறக்கட்டும் உங்களுக்கும்.

கவிதை எழுதிப் பழக உப்புமடச் சந்திக்கு வாங்கன்னு சொல்லிட்டுப் போனா....!

http://santhyilnaam.blogspot.com/

M.S.R. கோபிநாத் said...

@ ஹேமா, நான் தெரிஞ்சதை எல்லாம் சொல்லியிருக்கிறேன். உங்களுக்கு எது பிடிக்குதோ எது பண்ணமுடியுமோ அதை மட்டும் தேர்ந்தெடுத்து பண்ணுங்கள்.
உப்பு மட சந்திக்கு வந்தேன் ஹேமா. ஒரு படத்தைக் கொடுத்து எழுத சொல்லியிருக்கிங்க. என்ன எழுதுவதுனு இன்னும் யோசிக்கிறேன். கூடிய சீக்கிரம் எழுதுவேன். நம்புங்க..

M.S.R. கோபிநாத் said...

@ வாங்க தேனம்மை. நன்றி. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

M.S.R. கோபிநாத் said...

வருகைக்கு நன்றி சுதா. தொடர்ந்து பின்னூட்டம் இடுங்கள்.

Unknown said...

Arumai gopi...romba nalla solli irukeenga...

Wish you and your family a very Happy New Year...

Regards
Sujatha

M.S.R. கோபிநாத் said...

@ வாங்க சுஜா. வருகைக்கு நன்றி, உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ப்ரியமுடன் வசந்த் said...

நல்ல விஷயங்கள்...

புத்தாண்டு வாழ்த்துக்கள் தல...!