Thursday, December 17, 2009

எல்லாம் தலைவிதி

உங்களுக்கு விதியின் மேல் நம்பிக்கை இருக்கிறதா?


எதையாவது நாம் எதிர்பார்த்துக் காத்திருக்கையில் ‘நமக்கு நடக்கும்னு இருந்தா கண்டிப்பாக நடக்கும்’ என்று பலர் சொல்லிக் கேட்டிருப்போம். நல்லதுக்கும், கெட்டதுக்கும் விதியின் மேல் எத்தனையோ முறை நாம் பழியைப் போட்டிருப்போம். அப்படிப்பட்ட விதியை காரணமாக்கி அதையே படமுமாக்கியிருக்கிறார்கள். மனிதனுக்கு அவ்வப்போது உள்ளுணர்வு(instinct) வரும். அந்தக் காரியத்தைச் செய்யனும்னு நினைச்சேன், ஆனால் கடைசி நேரத்தில் வேண்டாம்னு விட்டுட்டேன். என் மனசில என்னமோ பட்டிச்சு என்றெல்லாம் உள்ளுணர்வைப் பற்றி சமயத்தில் பினாத்தியிருப்போம். அந்த உள்ளுணர்வு தான் இந்த படத்தின் நாயகன்.


’தி ஃபைனல் டெஸ்டினேஷன் 4’ சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. மிரட்டியிருந்தார்கள். கொஞ்ச நாளைக்கு முன்னர் தான் ஃபைனல் டெஸ்டினேஷன் 1, 2, மற்றும் 3 பாகங்களை பார்த்தேன். முதல் பாகத்தில் இருந்த விறுவிறுப்பு என்னை மற்ற மூன்று பாகங்களையும் உடனே பார்க்கத் தூண்டியது. எந்த பாகத்திலும் ஒரு நிமிஷம் கூட தொய்வு கிடையாது. இளகிய மனசு உள்ளவர்கள் இந்தப் படங்களைப் பார்க்க வேண்டாம். கொஞ்சம் மன தைரியம் வேண்டும். இது ஹாரர்(Horror) மூவி கிடையாது. ஆனால் த்ரில்லிங்கிற்கு குறைவிருக்காது. கதையின் பேஸிக் லைன்(Basic Line) என்னவோ எல்லா பாகத்திலும் ஒன்று தான். ஆனால் எடுத்த விதம் மற்றும் அதன் களம் தான் வேறு வேறு.


முதல் பாகத்தில் நண்பர்கள் ஒரு விமானத்தில் பயணம் மேற்கொள்கிறார்கள். விமானம் கிளம்புவதற்க்கு முன்பே அதில் ஒருவன் வந்த களைப்பில் சிறிது அயர்ந்து தூங்குகிறான். அவனுக்கு அந்த விமானம் கிளம்பிக் கொஞ்ச நேரத்திலே வெடித்து சிதறுகிற மாதிரி ஒரு கணவு(Premonition) வருகிறது. உடனே விமானத்தை விட்டு வெளியே வந்து விடுகிறான். அதில் சில நண்பர்களும் அவனுடன் வேளியே வந்து விடுகிறார்கள். அவன் கனவில் வந்த மாதிரியே டேக் ஆஃப் ஆன அடுத்து சில நொடிகளிலே அவன் கண்முன் வெடித்துச் சிதறுகிறது. ஆனால், விதி வலியது. அவர்கள் அந்த விமானத்தில் இறக்க வேண்டும் என்பது விதி. ஆனால் தப்பித்து விட்டார்கள். வெளியில் அவனுடன் வந்த நால்வரும் எப்படி அடுத்தடுத்து இறக்கிறார்கள்? உயிரோடு இருக்க சாத்தியமே இல்லையா? அவர்கள் எந்த வரிசையில் அடுத்தடுத்து இறக்கவேண்டும் என்பது விதி? என்பதை படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். முதல் பாகத்தைப் பார்க்கிறவர்கள் கண்டிப்பாக மற்ற மூன்று பாகங்களையும் பார்க்காமல் விட மாட்டார்கள்.





இரண்டாம் பாகத்தில், ஒரு ரோட்(Road) ஆக்ஸிடெண்ட் தான் களம். இதுவரை அப்படி ஒரு ஆக்ஸிடெண்டை யாரும் பாத்திருக்க முடியாது. இந்த படத்தில் ஒரு பெண்மணிக்கு அந்தக் கனவு(Premonition) வருகிறது. ஆனால் இந்த தடவை வேறு ஒரு வரிசையில் அடுத்தடுத்து இறக்கிறார்கள். அதில் யார் அடுத்து இறக்கப் போகிறார்கள் என்பது தான் படத்தின் சுவாரஸ்யமே. சாவுக்குப் பயந்து ஒரு பெண்மணி எப்படி ஒளிந்திருந்தாள். அவள் எப்படி வெளியே வந்தாள்? பிறரைக் காப்பாற்ற உதவினாளா? விதிக்கு கருணையே கிடையாதா? என்பதற்கெல்லாம் இந்தப் படத்தின் டிவீடி பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.




மூன்றாம் பாகத்தில், ஒரு ரோலர்கோஸ்டர். நாம் நம்மூரில் ரங்கராட்டினத்தில் ஏறவே பயப்படுவோம்(நான் பயப்படுவேன்). இங்கே ஒரு ஜயண்ட் ரோலர்கோஸ்டர்(Giant Roller Coaster). நண்பர்கள் விடுமுறையை களிப்பதர்காக ஒரு தீம் பார்க் வருகிறார்கள். எல்லோரும் ரோலர்கோஸ்டரில் ஏறிக்கொள்ள கதாநாயகியாக வருபவர் மட்டும் ஏனோ ஏறிக்கொள்ள மறுக்க, அதே போல் உள்ளுணர்வு வந்து நண்பர்களைப் போகவேண்டாம் என்று தடுத்துப் பார்க்கிறார். வழக்கம் போல் நண்பர்கள் அவளைத் திட்டிவிட்டு, அறிவுரை சொல்லிவிட்டு சில நண்பர்கள் மட்டும் ஏற, நடக்கிறது அந்த விபரீதம். இந்த தடவையும் வரிசைகள் மாறுகிறது. யாரெல்லாம் அதை நம்ப மறுக்கிறார்களோ அவர்களுக்கு மரணமே பதிலாக கிடைக்கிறது. இந்த மூன்றாம் பாகம் மட்டும் கொஞ்சம் போர் அடிப்பதாக நண்பர்கள் சொன்னார்கள். எனக்கு ஒன்றும் தெரியவில்லை.




சமீபத்தில்(2009) வந்தது நாலாவது பாகம். அமெரிக்காவில் இந்த படம் சக்கைப் போடு போட்டது. மற்ற மூன்றை விட இந்த பாகம் நன்றாக எடுத்திருப்பதாக விமர்சனங்களில்(Reviews) படித்தேன். கார் ரேஸ் நடக்கும் இடம் தான் இங்கே களம். இங்கே ஒரு சின்ன காரின் பாகம் உதிர்ந்து, கார் ரேஸ் நடக்கும் ரோட்டில் வந்து விழுவதால், விதி எப்படி பல பேர் உயிரைக் குடிக்கிறது என்பதை சொல்லியிருக்கிறார்கள். கிராபிக்ஸில் கலக்கியிருக்கிறார்கள். இசை பிரமாதம். இன்னும் டிவீடி வரவில்லை.




இந்த கதையை சமீபத்தில் இதே மாதிரி எங்கேயோ கேட்டமாதிரி, ஏதோ படத்தில் பார்த்த மாதிரி உங்களுக்கு தோன்றுகிறதா? வேறு எங்கும் இல்லை. சமீபத்தில் தமிழில் எல்லோரும் வித்தியாசமான கதை என்று பார்த்து பாராட்டிய ’ஈரம்’ படம் தான். அப்பட்டமாக காப்பி அடிக்காமல் தமிழுக்கு தகுந்த மாதிரி காப்பி அடித்திருக்கிறார்கள் வழக்கம் போல. இந்த படங்களைக் பார்க்கும்பொழுது தயவுசெய்து குழந்தைகளை வைத்துக் கொண்டுப் பார்க்காதீர்கள்.


நான்காம் பாகத்தின் ட்ரைலரைக் காண இங்கே சொடுக்கவும்.

11 comments:

geethappriyan said...

நன்றாக எழுதியுள்ளீர்கள்.மூணு பாகங்களுக்கு ஒரே பதிவில் விமர்சனம். நல்ல முய்ற்சி,ஓட்டுக்கள் போட்டாச்சு.

M.S.R. கோபிநாத் said...

நன்றி கார்த்திகேயன். ஓட்டுகும் நன்றி.

உங்கள் தோழி கிருத்திகா said...

நீங்களும் பாத்திங்களா.....முதல் பாகத்தை பாத்துட்டு நான் ஒரு நாள் சாப்படலை...ஆனாலும் விடாம 3 பாகம் வரை பார்த்துட்டேன்..எனக்கு மூணாம் பாகம் தான் ரொம்ப இண்டரஸ்டா இருந்தது...:)
4வது பாகம் பாத்துட்டு சொல்லரேன்

M.S.R. கோபிநாத் said...

@ வாங்க கிருத்திகா. வருகைக்கு நன்றி. கண்டிப்பாக நாலாவது பாகம் பாருங்க. உங்களுக்குப் பிடிக்கும்.

Thenammai Lakshmanan said...

சா (saw 1., 2.,3., )படத்தைப்பார்த்துட்டு ரொம்ப நாள் கஷ்டப்பட்டேன் இதெல்லாம் எனக்கு சரிவருமா கோபிநாத்

M.S.R. கோபிநாத் said...

@ வாங்க தேனம்மை லக்‌ஷ்மனன்.நீங்க கொஞ்சம் பயந்த சுபாவம் மாதிரி தெரியுது. பாகம் ஒன்று பாருங்கள் பிடித்திருந்தால் மற்ற மூன்றையும் பாருங்கள். வருகைக்கு நன்றி.

Jackiesekar said...

கோபி இந்த படத்தை நானும் பார்க்க ஆவலாக உள்ளேன்...நீங்க இந்த படத்தை இன்னும் பார்க்கலையா???

M.S.R. கோபிநாத் said...

@ வாங்க ஜாக்கிசேகர். நாலவது பாகம் நான் பார்த்துட்டேன். தியேட்டரில். படம் சூப்பர். நன்றி.

ஹேமா said...

கோபி எனக்கு விதிமேல நம்பிக்கை இல்லை.எல்லாம் எங்கள் முயற்சிதான்.எல்லாம்பொய.என்றாலும் உங்கள் விமர்சனம் அசத்தல்.

உங்களுக்கு கவிதை எழுதிப் பழகணுமா ?வாங்க உப்புமடச்சந்திக்கு.

M.S.R. கோபிநாத் said...

@ நன்றி ஹேமா. உப்புமடச்ச்ந்திக்கு வருகிறேன். முயற்சி பண்ணுகிறேன்.

Unknown said...

Anna its me 4 part u naan parthutean 4 vathu part 3d parthean it was nice.u Know naan english padam paithiyam naan oru list kodukirean atha parunga
1.house of was
2.collector
3.descent(1,2)